இந்தியாவுக்கு இலவசமாக கச்சா எண்ணெய் கொடுக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்!
டெல்லி: இந்தியாவில் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கவும் அதில் 3-ல் 2 பங்கை இந்தியா இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய எண்ணெய் நிறுவனமான "அட்னாக்" ஒப்புதல் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அமீரகம் விருப்பம் தெரிவித்துள்ளது.
அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான் 3 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இந்தியாவுக்கு முதன் முறையாக வருகை தந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.

அபுதாபி இளவரசரின் இந்த பயணத்தில் இருதரப்பு தொழில் முதலீடுகள், ஐஎஸ் பயங்கரவாதம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இதன் ஒருபகுதியாக அமீரகத்தின் தேசிய எண்ணெ நிறுவனமான அட்னாக் (அபுதாபி நேஷனல் ஆயில் கார்ப்பரேஷன்), இந்தியாவில் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்கவும் அதில் 3-ல் 2 பங்கை இந்தியா அவசரகாலத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் 79% அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதை சேமித்து வைக்கப்பதற்காக பாதாள சேமிப்பு கிடங்குகள் ஆந்திராவின் விசாகப்பட்டினம், கர்நாடகாவின் மங்களூர், படூரில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய் சேமிக்க முடியும்.
இதில் மங்களூர் சேமிப்பு கிடங்கில் 15 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை தன்னுடைய வர்த்தக பயன்பாட்டுக்காக சேமித்து வைக்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வைந்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அப்படி சேமித்து வைக்கும் கச்சா எண்ணெய்யை இந்தியா அவசர தேவைகளுக்கு 3-ல் 2 பங்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் அமீரக எண்ணெய் நிறுவனமான அட்னாக் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
இதேபோல் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அமீரகம் விருப்பம் தெரிவித்துள்ளது.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications