ஆந்திராவில் வன்முறை: ரயில், 2 காவல் நிலையங்கள், 25 வாகனங்களுக்கு தீ வைப்பு
ஹைதராபாத்: ஆந்திராவில் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய காபூ சமூகத்தினர் ரயில் ஒன்றுக்கு தீ வைத்தனர். இதில் 8 பெட்டிகள் எரிந்து நாசமாகின.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இட ஒதுக்கீடு கோரி காபூ சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர். அவர்கள் சாலை மறியல் செய்ததுடன் ரயில் மறியலும் செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலை 16ல் சாலை மறியல் செய்த அவர்கள் 25 வாகனங்களை தீ வைத்து எரித்தனர். மேலும் இரண்டு காவல் நிலையங்களுக்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் ரத்னாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் அந்த ரயிலின் 8 பெட்டிகள் எரிந்து நாசமாகின. நல்ல வேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

காபூ சமூகத்தினரின் போராட்டம் வன்முறையாக மாறிதில் 15 போலீசார் காயம் அடைந்தனர். போராட்டத்தால் நேற்று மதியம் முதல் விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான ரயில் போக்குவரத்தும், சென்னை-கொல்கத்தா இடையேயான வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. போராட்டத்தால் 27 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

விசாகப்பட்டினத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துனி என்ற இடத்தில் காபூ சமூகத்தினரின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. மதியம் 3 மணி அளவில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா சென்ற ரத்னாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு தீ வைத்தனர். அவர்கள் துனியில் உள்ள காவல் நிலையம் ஒன்றுக்கும் தீ வைத்தனர். இதில் 5 போலீசார் காயம் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் துனி ரயில் நிலையத்தை சூறையாடினர். இதில் ரயில்வே ஊழியர்கள் நான்கு பேர் காயம் அடைந்தனர். நள்ளிரவில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,
காபூ சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் வசிக்கும் மக்களில் 27 முதல் 30 சதவீதம் வரை உள்ளவர்கள் காபூ சமூகத்தினர். தற்போது பிற சாதியினர் பிரிவில் உள்ள அவர்களை தாழ்த்தப்பட்ட சாதியினர் பிரிவில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications