'நாங்கள் எங்கும் உள்ளோம்': ஹரியானா அரசு இணையதளத்தை ஹேக் செய்த ஐஎஸ்ஐஎஸ்
சன்டிகர்: ஹரியானா அரசு இணையதளத்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் ஹேக் செய்தனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இணையதளமான www.scertharyana.in கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் ஹேக் செய்யப்பட்டது.
அரசு இணையதளத்தை ஹேக் செய்த அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் கொடி அடங்கிய படத்தை போட்டு அத்துடன் ஐஎஸ்ஸால் ஹேக் செய்யப்பட்டுள்ளது; நாங்கள் எங்கும் உள்ளோம் என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த இணையதளம் சில மணிநேரம் வேலை செய்யாமல் இருந்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் இந்த ஹேக்கிங் விவகாரம் குறித்த விசாரணை குர்காவ்ன் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இது குறித்து குர்காவ்ன் ஏடிசி வினய் பிரதாப் சிங் கூறுகையில்,
ஹரியானா அரசிடம் இருந்து ஹேக்கிங் குறித்த புகார் வந்துள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கம் எந்த வெப் லிங்குகளை பயன்படுத்தி ஆன்லைனில் அந்த தகவலை வெளியிட்டது என்பதை கண்டறியும் வேலை நடந்து வருகிறது என்றார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications