கல்யாண வீடு துக்க வீடானது.. துருக்கியில் குண்டு வெடித்து 30 பேர் பலி.. 94 பேர் காயம்!
அங்காரா: துருக்கியில் நடைபெற்ற கல்யாண நிகழ்ச்சி ஒன்றில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் பலியாகியுள்ளனர். 94 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கியின் காஜியாண்டப் நகர் போர் நடைபெற்று வரும் சிரிய நாட்டில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் திருமண நிகழ்வு ஒன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று வெடிகுண்டு வெடித்தது. இதனால் திருமணத்திற்கு வந்த அனைவரும் சிதறி சாலையின் பல்வேறு பக்கங்களில் ஓட்டம் எடுத்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 30 பேலி பலியானார்கள். 94 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் குர்தீஷ் படையினருக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன. இதுபோன்று வெடிகுண்டு தாக்குதல் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
இதுகுறித்து துருக்கியின் துணை பிரதமர் மேக்மெட் சிம்சிக் இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்றும் இதனை நாங்கள் கடந்து வருவோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல் நிச்சயமாக ஐஎஸ் வேலையாகத்தான் இருக்கும் என்று துருக்கி அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இதுவரை துருக்கியில் நடந்த தாக்குதல்கள்:
ஆகஸ்டு 18: தென் கிழக்கு துருக்கியில் வெடிகுண்டு தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் பலி.
ஆகஸ்டு 10: தென் கிழக்கு துருக்கியில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
ஜுலை 30: 35 குர்திஷ் அமைப்பினர் துருக்கி ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
ஜுன் 29: இஸ்தான்புல்லில் உள்ள அட்டுர்க் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் பலி.
ஜுன் 7: பேருந்து ஒன்றில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 7 போலீசார் உட்பட 11 பேர் உயிரிழப்பு.
மார்ச் 19: மத்திய இஸ்தான்புல்லில் சந்தை ஒன்றில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 4 பேர் பலி
மார்ச் 13: அங்காராவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி 17: அங்காராவில் ராணுவ வாகனத்தை தாக்க நடந்த முயற்சியில் 28 பேர் பொதுமக்கள் பலி.
ஜனவரி 12: ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் உட்பட 10 பேர் இஸ்தான்புல் தாக்குதலில் பலி.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications