செவ்வாயில் தண்ணீர்... 2015ல் வரலாற்றில் பொன்னால் பொறிக்கும் தகவலை வெளியிட்ட நாசா!
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பதை இந்தாண்டு செப்டம்பர் மாதம் நாசா அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. நாசாவின் இந்த அறிவிப்பின் மூலம் செவ்வாயில் மனிதர்களைக் குடியேற்றும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா சார்பில் 'மங்கள்யான்' அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை குறித்து ஆராய கடந்த 2006ம் ஆண்டு 'மார்ஸ் ரெகோனாய்சன்ஸ் ஆர்பிட்டர்' (எம்.ஆர்.ஓ.,) என்ற விண்கலத்தை ஏவியது.
இதில் பொருத்தப்பட்ட 'இமேஜிங் ஸ்பெக்டோ மீட்டர்' எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தில், அங்கு நீர் ஓடுவதற்கான ஆதாரம் கிடைத்தது.

தண்ணீர்...
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து செவ்வாய் கிரகத்தின் மலைப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும், தரைப்பரப்பிலும் தண்ணீர் இருப்பதை செப்டம்பர் மாதம் நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

உயிர்ப்போடு உள்ளது...
இந்தத் தண்ணீர் குளிர்காலத்தில் உறைந்து போயும், வெயில் காலத்தில் திரவ நிலைக்கு மாறி ஓடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த கிரகம் இன்னமும் புவியியல் ரீதியில் உயிர்ப்போடு இருப்பதையும் நாசா உறுதி செய்தது.

யூகம் உறுதியானது...
நாசாவின் இந்த அறிவிப்பு மூலம் விஞ்ஞானிகளின் நீண்டகால யூகம் உறுதி செய்யப்பட்டது. செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் இது முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

இந்தியர்...
ஏற்கனவே, கடந்த 2010ம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லூஜேந்திரா ஓஜா என்பவர், செவ்வாயில் இந்த உறை நிலைத் தண்ணீரைக் கண்டுபிடித்திருந்தார்.

சாத்தியக்கூறுகள்...
செவ்வாயில் நீர் ஆதாரம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வசிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள், உயிர் வாழத் தேவையான பிற அம்சங்கள் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

மணல் குன்றுகள்...
செவ்வாயில் நீர் கண்டுபிடிக்கப்பட்டதின் தொடர்ச்சியாக அங்கு மேற்பரப்பில் நொறுங்கிய நிலையில் மணல் குன்றுகள் இருப்பதையும் நாசா கண்டுபிடித்தது. உடைந்த படிவங்கள் காற்றில் பறந்து மணல் குன்றுகளாக மாறி இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏரிகள்...
இதே போல், நாசாவால் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி விண்கலமானது அங்கு ஏரிகள் இருந்ததை உறுதி செய்தது. இது தொடர்பாக சில புகைப்படங்களையும் அது அனுப்பியது.

வித்தியாசமான கண்டுபிடிப்புகள்...
இவ்வாறு செவ்வாய் குறித்து நாசா அடுத்தடுத்து பல கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. ஆனால், நாசா வெளியிட்ட மேலும் சில புகைப்படங்களை வைத்து வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராயும் சில நிறுவனங்கள் மேலும் சில தகவல்களை வெளியிட்டனர்.

பெண் உருவம்,,,
அதாவது நாசா வெளியிட்ட புகைப்படங்களின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம் தெரிவதாகவும், நண்டு, கரடி போன்ற உயிரினங்களின் உருவங்கள் தெரிவதாகவும் அவை கூறின. இது தொடர்பான புகைப்படங்களையும் அவை இணையத்தில் வெளியிட்டன.

புத்தர் சிலை...
இதேபோல், செவ்வாய் கிரகத்தில் உடைந்த விமானத்தின் பாகங்கள் கிடப்பதாகவும், புத்தர் சிலை இருப்பதாகவும் நாசா வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் இந்த அமைப்புகள் கூறின. மேலும் அங்கு மீன் போன்ற தோற்றத்தில் குகைகளில் உயிரினங்கள் வசிப்பதாகவும் கூறப்பட்டது.

குற்றச்சாட்டு...
இந்த நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து நாசா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இதனால், நாசா திட்டமிட்டு செவ்வாய் கிரகம் குறித்த உண்மையான விவரங்களை மறைப்பதற்காகவே சில கருப்பு வெள்ளை புகைப்படங்களை வெளியிடுவதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
எப்படியோ 2015ம் ஆண்டின் விண்வெளி முக்கியத்துவத்தில் செவ்வாயில் தண்ணீர் என்ற இந்த செய்திக்கும் முக்கிய இடம் கிடைத்தது என்பதில் சந்தேகம் இல்லை.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications