ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற நிலநடுக்கம்... தேசிய பேரிடர் என அறிவித்தது நேபாள அரசு
காத்மாண்ட்: இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ள நிலநடுக்கத்தை தேசிய பேரிடர் என நேபாள அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தில் நேற்று முதல் அடுத்தடுத்து பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் அங்குள்ள மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தில் சிக்கி இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் நாலாயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. எனவே, பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. சர்வதேச நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தை தேசிய பேரிடர் என அந்நாடு அறிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதை அடுத்து, நேபாளம் இந்த அறிவிப்பை வௌளியிட்டுள்ளது.
மேலும், நேபாளத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒரு வார விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications