ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. கடல் தாண்டியும் ஆதரவுக் குரல்.. சவுதியில் !
அபா: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சவூதியில் வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னை குலுங்கும் அளவிற்கு மெரினாவில் 3வது நாளாக விடிய விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

வெளிநாடு வாழ் தமிழர்களும் அவர்கள் பணிபுரியும் இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சவுதி அரேபியா, அபா நகர் அருகே உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம் எனவே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பீட்டாவுக்கு எதிரான வாசகங்களையும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்களையும் கைகளில் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்திய அரசு விரைவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications