For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: யாழ். மாவட்டத்தின் 7 -ல் 5 இடங்களைக் கைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி!

By Mathi
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 7 இடங்களில் 5-ஐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒரு சில வன்முறைகளுடன் நடைபெற்ற தேர்தலில் சுமார் 70% வாக்குகள் பதிவாகி இருந்தன.

TNA wins landslide victory in Jaffna

இந்த வாக்குகளை எண்ணும் பணி நேற்று இரவு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே தலையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் சுதந்திரக் கட்சி தலைமையிலான ராஜபக்சேவை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஆகியவை இடையே ஒரு சதவீத வாக்குகள் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன.

இதனால் மகிந்த ராஜபக்சே பிரதமராவா? என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.

இதனிடையே தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளன.

இம்மாவட்டத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு மொத்தம் 7 இடங்கள் உள்ளன. இதில் 5-ஐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

எஞ்சிய இரு இடங்களில் ஒன்றை டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சியும் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டம் (7 இடங்கள்) இறுதி முடிவுகள்:

இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 2,07,577(69.12%) வாக்குகள் - 5 இடங்கள்

டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி - 30,232 (10.07%) வாக்குகள் - 1 இடம்

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி - 20,025 (6.67%) வாக்குகள் - 1 இடம்

மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 17,309 (5.76%) வாக்குகள்

முன்னாள் புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட சுயேட்சை கட்சிகள் - 1,979 (0.66%) வாக்குகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 தமிழ் எம்.பி.க்கள் விவரம்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு:

மாவை சேனாதிராஜா

ஸ்ரீதரன்

சித்தார்த்தன்

சுமந்திரன்

சரவணபவ

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

டக்ளஸ் தேவானந்தா

ஐக்கிய தேசிய கட்சி

விஜயகலாவும் மகேஸ்வரன்.

English summary
Tamil National Alliance won 5 seats from Jaffna district in Srilanka Parliament elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X