அமெரிக்க ஷாப்பிங் மாலில் 5 பேர் சுட்டுக் கொலை.. தப்பியோடிய 20 வயது கொலையாளி கைது
வாஷிங்டன்: அமெரிக்க வணிக வளாகத்தில் 5 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் உள்ளது கஸாகேட் மால் என்ற பிரபல வணிக வளாகம். கடந்த வெள்ளியன்று இரவு இந்த வளாகத்திற்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார்.

இந்த தாக்குதலில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடி தலைமறைவானார்.
அதனைத் தொடர்ந்து தாக்குதலை நேரில் பார்த்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தற்போது அந்த சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்துள்ளதாக வாஷிங்டன் போலீசார் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். குற்றவாளியின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபரின் வயது 20 என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், இதற்கு பின்னணியில் தீவிரவாத செயல் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து சுமார் 97 கி.மீ., தொலைவில் அந்த நபரை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications