For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் நாளை, நடப்பு சாம்பியன் இந்தியா- 'குட்டி இந்தியா' மோதல்!

By Veera Kumar

பெர்த்: உலக கோப்பையில் தனது மூன்றாவது போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியா நாளை ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள, இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், அடுத்த போட்டியில் 130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி அசத்தியது.

நாளை பகலில் போட்டி

நாளை பகலில் போட்டி

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக நாளை பெர்த் மைதானத்தில் 3வது போட்டியை சந்திக்க உள்ளது இந்தியா. இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. அரபு நாட்டு ரசிகர்களுக்கும், தொலைக்காட்சியில் போட்டியை பார்க்க இது வசதியான நேரமாகும்.

பேட்டிங் சூப்பர்

பேட்டிங் சூப்பர்

இந்தியாவில் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. ஷிகர் தவான், விராட் கோஹ்லி ஆகியோர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்தியாவின் பலமாகும். ரெய்னா, ரஹானே ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா அடிக்க ஆரம்பித்தால் தடுப்பது எளிதான காரியமில்லை.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

பவுலிங்கிலும் எதிர்பார்த்ததைவிட சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றனர் இந்திய பவுலர்கள். நாளைய போட்டியில் ஷமி ஆடப்போவதில்லை என்றாலும், மோகித் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜோடியும், புவனேஸ்வர் குமாரும் வேகப்பந்து துறையை கவனித்துக்கொள்வார்கள், அஸ்வின், ஜடேஜா, ரெய்னா ஆகியோர் ஸ்பின் பிரிவை கவனித்துக் கொள்வார்கள். எப்படிப் பார்த்தாலும், இந்திய அணி பல மடங்கு வலிமையாகவே தெரிகிறது.

அடுத்தடுத்து தோல்வி

அடுத்தடுத்து தோல்வி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை பொறுத்தளவில் ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய நாடுகளிடம் தோல்வியைடந்துள்ளது. அந்த நாட்டு வீரர்களின் மொத்த அனுபவமே 30 போட்டிகள் என்ற அளவில்தான் உள்ளது. எனவே நாளைய போட்டியில் இந்தியாவின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டதாகவே தெரிகிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் எதையும் சொல்ல முடியாது என்பதால் போட்டி பரபரப்பை ஏற்படுத்திதான் வைத்துள்ளது.

முதலிடத்தை பிடிக்க மும்முரம்

முதலிடத்தை பிடிக்க மும்முரம்

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க முடியும். மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து நாடுகளுக்கு எதிரான, அடுத்தடுத்த போட்டிகளில், ஒருவேளை, தடுமாறினாலும், அமீரகத்துடனான போட்டியில் அதிக புள்ளிகள் பெற்றால் அது உதவிகரமாக இருக்கும் என்பது இந்திய அணியின் எண்ணம்.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

மேலும், குரூப் பி பிரிவில் முதலிடத்தை தக்க வைத்தால், காலிறுதியில், ஏ பிரிவின் கடைசி இடத்தை சேர்ந்த அணியுடன் மோதும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். எனவே முதலிடத்தை தக்க வைப்பதில் இந்தியா முனைப்பு காண்பிக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கிருஷ்ண சந்திரன் என்ற ஆல் ரவுண்டரும், ஸ்வப்னில் பாட்டில் என்ற விக்கெட் கீப்பரும் இந்தியர்களாகும். இருவருமே நாளைய போட்டியை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். 11 பேர் கொண்ட அணியில் 2 பேர் இந்தியர்கள்தான் என்பதால், அமீரக அணியை குட்டி இந்தியா என்று கூறலாம்தானே..

Story first published: Friday, February 27, 2015, 17:09 [IST]
Other articles published on Feb 27, 2015
English summary
Having demolished Pakistan and South Africa in their first two matches by dishing out clinical performances, defending champions India would look to complete a hat-trick of victories when they take on minnows United Arab Emirates in their third group league match of the cricket World Cup in Perth on Saturday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X