For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2015: சிறந்த ஜோடி, சிறந்த சிக்சர் மன்னன்..அடடா எத்தனை பட்டங்கள் சென்னைக்கு!

By Veera Kumar

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் சிறந்த டீம், சிறந்த வீரர்களை போட்டியை ஒளிபரப்பும் சோனி மேக்ஸ் தொலைக்காட்சி சேனல் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். முதல் 16 போட்டிகள் முடிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த டெல்லி மற்றும் கொல்கத்தா நடுவேயான போட்டி இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

இந்த பட்டியலில் சிறந்த அணி, சிறந்த வீரர், சிறந்த சிக்சர் மன்னர் என பல பிரிவுகள் உள்ளன. இதோ அந்த பட்டியல்..

தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ், சிறந்த அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முதல் ஐபிஎல் சீசனின் சாம்பியனான இந்த அணி, நடப்பு சீசனிலும், பழைய உற்சாகத்தோடு ஆடுகிறது.

சிறந்த பேட்டுக்காரர்

சிறந்த பேட்டுக்காரர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அஜிங்ய ரஹானே ஐந்து போட்டிகளில் 231 ரன்களுடன், ரன் குவிப்பில் முதலிடத்திலுள்ளார். ஆரஞ்சு வண்ண தொப்பிக்காரர் ரஹானே, சிறந்த பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த புதுமுகம்

சிறந்த புதுமுகம்

நடப்பு சீசனில் சிறந்த புதுமுக வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் தீபக் ஹூடா. இவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரராகும். இவர், வலுவான பேட்ஸ்மேனாக மட்டுமின்றி, சிக்கனமாக பவுலராகவும், ஆல்-ரவுண்ட் பெர்பார்மன்ஸ் செய்கிறார். இத்தனைக்கும் வயது 19தான்.

சிக்சர் மன்னர்

சிக்சர் மன்னர்

சிஎஸ்கே அணியின் பிரெண்டன் மெக்கல்லம், மும்பையின் பொல்லார்ட் ஆகியோர் தலா 11 சிக்சர்களுடன், சிக்சர் மன்னர்கள் அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

பதுங்கி பாய்தல்

பதுங்கி பாய்தல்

நல்ல கம்பேக் அணி என்ற பெருமை டெல்லிக்கு கிடைத்துள்ளது. அந்த அணி போன சீசனில் தொடங்கிய, தொடர்ச்சியாக 11 தோல்விகளை அடைந்த நிலையில், அடுத்தடுத்து இரு போட்டிகளில் வெற்றி பெற்று இந்த பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த வெளிநாட்டு வீரர்

சிறந்த வெளிநாட்டு வீரர்

சிறந்த வெளிநாட்டு இறக்குமதி வீரர், தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் இம்ரான் தாகீர். இவர், 9 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஊதா கலரு, தொப்பியை பெற்றுள்ளார்.

சிறந்த ஜோடி

சிறந்த ஜோடி

சிறந்த பார்ட்னர்ஷிப் ஆட்டமாக, சிஎஸ்கே தொடக்க வீரர் பிரெண்டன் மெக்கல்லம், மற்றும் ட்வைன் ஸ்மித் ஆட்டம் தேர்வாகியுள்ளது. அவ்விருவரும், மும்பைக்கு எதிரான போட்டியில், 7.2 ஓவர்களில் 109 ரன்கள் ஜோடியாக குவித்திருந்தனர்.

Story first published: Tuesday, April 21, 2015, 15:01 [IST]
Other articles published on Apr 21, 2015
English summary
After 16 matches in the ongoing Indian Premier League 2015 (IPL 8), it is time to look back at the best players, team of the tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X