For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்பந்தோட்டா துறைமுகத்தை ராணுவ நடவடிக்கைக்கு சீனா பயன்படுத்த இலங்கை அதிரடி தடை!

அம்பந்தோட்டா துறைமுகத்தை ராணுவ நடவடிக்கைக்கு சீனா பயன்படுத்த கூடாது என ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: சீனா கட்டிய சர்ச்சைக்குரிய அம்பந்தோட்டா துறைமுகத்தை எந்த சூழலிலும் ராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் இலங்கை அரசு அதிரடியாக ஒப்பந்தத்தை மாற்றி அமைத்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தது இலங்கை. ஆனால் இந்திய அரசு அலட்சியமாக இருந்தது.

இதனால் கொழும்பு துறைமுகத்தை சீனா கைப்பற்றி விரிவாக்கம் செய்ய தொடங்கியது. இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேமன் அண்மையில் இதை சுட்டிக்காட்டியும் இருந்தார்.

தென்னிலங்கை முழுவதும்

தென்னிலங்கை முழுவதும்

கொழும்பை தொடர்ந்து அம்பந்தோட்டா துறைமுகத்தையும் சீனாவுக்கு தாரை வார்த்தது இலங்கை. இப்படி இலங்கையின் தென்பகுதி முழுவதும் சீனாவுக்கு போனதில் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது.

சீனா நீர்மூழ்கிக் கப்பல்

சீனா நீர்மூழ்கிக் கப்பல்

பின்னர் இந்தியாவை சீண்டும் வகையில் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டன. இதனை இந்தியா வன்மையாக கண்டித்தது. இதன்பின்னர் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் மிகக் கடுமை காட்ட தொடங்கியது இந்தியா.

போராட்டங்கள்

போராட்டங்கள்

அதேநேரத்தில் அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு எதிராக இலங்கையிலும் போராட்டங்கள் வெடித்தன. சீனா மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்த கோரி இந்த போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை கட்டுப்படுத்த அழுத்தம் கொடுத்து வந்தது.

ஒப்பந்தம் மாற்றியமைப்பு

ஒப்பந்தம் மாற்றியமைப்பு

இதனால் வேறுவழியின்றி தற்போது சீனாவுடனான துறைமுக பயன்பாட்டு ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றி அமைக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

ராணுவ நடவடிக்கை கூடாது

ராணுவ நடவடிக்கை கூடாது

இதன்படி அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீனா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. சிக்கிம் எல்லையில் சீனா- இந்தியா இடையே பதற்றம் நிலவும் நிலையில் இந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

English summary
Sri Lanka's cabinet cleared a revised agreement for its Chinese-built southern port of Hambantota on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X