கட்டாய ஆட்சேர்ப்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் இசைக் கல்லூரி பொறுப்பாளருக்கு ஆயுள் தண்டனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

வவுனியா: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கட்டாயமாக ஆட்சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் புலிகளின் இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ அரசாங்கத்தை பிரபாகரன் நடத்திய காலத்தில் இசைக் கல்லூரியும் நடத்தப்பட்டது. இந்த கல்லூரியின் பொறுப்பாளராக இருந்தவர் கண்ணதாசன்.

Vavuniya court pronounces life sentence to Senior LTTE leader

இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார் கண்ணதாசன். பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது பிள்ளை ஒருவரை கண்ணதாசன் புலிகள் இயக்கத்தில் பலவந்தமாக சேர்த்துவிட்டார் என வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

ICC rankings! Ravichandran Ashwin slips to third place-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Srilanka's Vavuniya Court has pronounced the life sentence to LTTE Senior leader Kannadasan.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்