சீட் கொடுக்காத கோபம்... வேலூர் அதிமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா- சுயேட்சையாக போட்டி
வேலூர்: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வழங்கப்படாததால் வேலூர் அ.தி.மு.க பெண் கவுன்சிலர் உஷா நந்தினி தன் பதவியை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
வேலூர் தொகுதியில் போட்டியிட 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்திருந்தார்கள். அதில் வேலூர் மாநகராட்சி 54-வது வார்டு கவுன்சிலர் உஷா நந்தினியும் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், வேலூரிலிருந்து இரண்டு நபர்களை மட்டுமே அழைத்து ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.

உஷா நந்தினிக்கு அழைப்பு இல்லாதபோதும் தன்னிச்சையாக சென்று எப்படியாவது ஜெயலலிதாவை சந்தித்து விட எண்ணினார். ஆனால், அங்கு இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. வேலூர் தொகுதிக்கும் மேற்கு மாவட்ட பொருளாளர் நீலகண்டன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார்.
தனக்கு சீட் வழங்காததை கண்டித்து தனது கவுன்சிலர் பதவியை நேற்று ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையரிடம் தனது ஆதரவாளர்களுடன் சென்று கடிதம் கொடுத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நான் கவுன்சிலர் பணியோடு 'பாரத் அம்மா சமூக சேவை தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன்.
வேலூர் தொகுதியிலிருந்து பெண் வேட்பாளர்கள் இதுவரை சட்டசபைக்கு சென்றதே இல்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கேட்டிருந்தேன், வழங்கப்படவில்லை. அதனால், என் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுயேட்சையாக நிற்க போகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications