நித்தியின் பிடதி ஆசிரமத்தில் இளம்பெண் மரணம் - மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
திருச்சி: பிடதி நித்தியானந்தா ஆசிரமத்தில் உயிரிழந்த சங்கீதாவின் தந்தை, ‘தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக' திருச்சி போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள் சங்கீதா (24). பி.சி.ஏ. படித்துள்ள சங்கீதா, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக மாநிலம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி ஆசிரம வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார் சங்கீதா. உடனடியாக சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர் ஆசிரமத்தினர்.
திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட சங்கீதாவின் உடல் நாவலூரில் அடக்கம் செய்யப்பட்டது. சங்கீதாவின் மரணம் தொடர்பாக யாரிடமும் குறிப்பாக ஊடகங்களில் வாய் திறக்கக் கூடாது என அவரது குடும்பத்தாரிடம் ஆசிரமத்தார் சத்தியம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் சங்கீதாவின் தந்தை புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகள் சங்கீதாவின் மரணத்தில் மர்மம் இருபபதாகவும், அதனை கண்டுபிடிக்குமாறும் அவர் தெரிவித்திருந்தார்.
முதலில், அந்தப் புகாரை ஏற்க மறுத்த போலீசார், பின்னர் அந்த புகார் குறித்து விசாரிக்குமாறு கர்நாடகா மாநிலம், பிடரி காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications