எனக்கு தம் அடிக்கும் பழக்கம் இல்லை, சினிமாவிலும் இனி செய்ய மாட்டேன்.. அன்புமணிக்கு தனுஷ் பதில்
சென்னை: பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் தனுஷ். இனிமேல் சினிமாவில் தான் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும, நிஜத்தில் தனக்கு புகை பிடிக்கும் பழக்கமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் தனுஷின் சமீப கால படங்களில் அவர் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகரித்து வந்தன. அதிலும் லேட்டஸ்டாக வந்த மாரி படத்தில் சரமாரியாக அவர் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தியேட்டரில் படம் பார்த்தவர்களுக்கே மூச்சு முட்டிப் போகும் அளவுக்கு சிகரெட் புகை படத்தில் ஓவராகவே இருந்தது.
இதைக் குறிப்பிட்டு டாக்டர் அன்புமணி, தனுஷுக்கு கடிதம் எழுதியிருந்தார். உங்களது மாமனார் ரஜினிகாந்த் கூட புகைபிடிப்பதை விட்டு விட்டார். மாமனார் என்பவர் அப்பாவுக்குச் சமம். மாமனாருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று அன்புடன் கோரியிருந்தார் அன்புமணி.
இதை உடனடியாக ஏற்றுள்ளார் தனுஷ். கடிதத்திற்கு பதில் அளித்துள்ள தனுஷ், உண்மையில் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. மாரி படத்தில் தாதா கேரக்டருக்காக இயக்குநர் வலியுறுத்தியதால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்தேன். இனிமேல் என் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புக்குரிய அன்புமணி ராமதாசுக்கும் இந்த அறிக்கை மூலம் உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications