சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு - கருத்து கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 37.7%; அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 35.7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகத்தின் "மக்கள் ஆய்வகம்" கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தேர்தல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக "மக்கள் ஆய்வகம்" ஒரு கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ராஜநாயகம் இந்த முடிவுகளை வெளியிட்டு கூறியதாவது:
சட்டசபை தேர்தல் தொடர்பாக கடந்தாண்டு ஆகஸ்ட்டில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தோம்.

39 லோக்சபா, 120 சட்டசபை தொகுதிகளில்..
இப்போது, மழை வெள்ள பாதிப்புக்குப்பிறகு மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய, தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளுட்பட்ட 120 சட்டசபை தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். ஜனவரி 7 முதல் 19 வரை நடந்த இக்கருத்துக்கணிப்பில் 5, 464 பேர் பங்கேற்றனர்.

திமுக சற்று கூடுதல் ஆதரவு
இதில் யார் தலைமையில் ஆட்சி என்ற யூகம் தொடர்பான பகுதியில், வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி/ கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும் என்ற யூகத்தில் அதிமுக அணியைவிட திமுக அணி சிறிதளவு முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்கு 37.7%; அதிமுகவுக்கு 35.7%
திமுக தலைமையில் ஆட்சி அமையும் என 37.7%;
அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என 35.7% என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வைகோ அணிக்கு 5.4%
வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்க 5.4% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாமக...
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள பாமக தலைமையில் ஆட்சி அமைக்க 2.2% பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பேராசிரியர் ராஜநாயகம் கூறினார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications