கங்கை அமரன் நல்லாத் தூங்குவார்.. பாலு ஜூவல்லர்ஸ் பாலு ஆத்மா சாந்தி அடையும்.. ராமதாஸ் அலேக்!
கங்கை அமரன் இன்று நன்றாக தூங்குவார், பாலு ஜூவல்லர்ஸ் பாலு வின் ஆத்மா சாந்தி அடையும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா - சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ஸ்டைலில் அதிரடியாக சில பல டிவீட்களைத் தட்டி விட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புதான் இன்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு வழக்கின் தீர்ப்பையும் இப்படி நாட்டு மக்கள் ஏகோபித்த குரலில் வரவேற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு இந்தத் தீர்ப்புக்கு நாலாபுறங்களிலும் அபரிமிதமான வரவேற்பும், ஆரவாரமான பாராட்டும் கிடைத்துள்ளது.
குமாரசாமி செய்த தவறுக்கு உச்சநீதிமன்றம் பரிகாரம் தேடி விட்டதாக பாராட்டுகள் குவிகின்றன. மறுபக்கம் குன்ஹாவை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் போட்டுள்ள சில அதிரடி டிவீட்கள்.
|
உப்புத் தின்றால்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை: உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது!
|
குமாரசாமி மட்டும் சரியா இருந்திருந்தா
குமாரசாமி சரியான தீர்ப்பு வழங்கியிருந்தால் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திருக்கும். பதவிச் சண்டைகளுக்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்காது!
|
அட அதை சொல்லுங்கப்பா யாராச்சும்
சசிகலா தண்டிக்கப்பட்டதற்காக ஓபிஎஸ் குழு கொண்டாட்டம்: அவர்கள் தலைவி ஜெயலலிதாவுக்கு இத்தண்டனை பொருந்தும் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்!
|
செல்லாது செல்லாது
மோசடியான தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவும், ஜெயலலிதாவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு பெற்ற வெற்றி செல்லாது!
|
விலகுங்கள் முதலில்
மோசடியான தீர்ப்பின் அடிப்படையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்!
|
கங்கை அமரன் நல்லா தூங்குவார்!
சசிகலாவுக்கு சிறை: கங்கை அமரன் இன்று நிம்மதியாக உறங்குவார். பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் ஆன்மாக்கள் சாந்தியடையும்!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications