சென்னையில் மாஜி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கு சரமாரி செருப்படி- 'பிரபாகரன்' கைது
சென்னை: சென்னையில் தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே. நாரயணனை தமிழ் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் செருப்பால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து எம்.கே. நாராயணனை செருப்பால் அடித்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்தவர் எம்.கே. நாரயணன். ஐந்தாண்டு அந்த பதவியில் இருந்தார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில், இந்தியாவில் இலங்கை அகதிகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எம்.கே. நாராயணன் இன்று கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் எம்.கே. நாராயணனை பலமுறை செருப்பால் அடித்து துவைத்தார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைத் தடுத்து போலீசார் கைது செய்தனர்.

எம்.கே. நாராயணனை செருப்பால் அடித்த இளைஞர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என தெரியவந்துள்ளது. இதனால் அந்த கருத்தரங்கம் நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'செருப்படி' தாக்குதல் ஏன்?
எம்.கே. நாராயணனை செருப்பால் சரமாரியாக தாக்கி கைது செய்யப்பட்ட பிரபாகரன் செய்தியாளர்களிடம், நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் இல்லை; இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தவறாக வழிநடத்தியவர் எம்.கே.நாராயணன். அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications