சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்! கேவலப்படுத்திய கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தான் தனது துறையில் உள்ள ஊழலை சுட்டிக்காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் ஊழல் குறித்து நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியதற்கு அமைச்சர்கள் ஆதாரம் இருக்கா என கேள்விக் கேட்டனர். இந்நிலையில் அதற்கு மரண அடியாக கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

Government's corruption vessel will be filled if the cinema people gives voice: Kamal

இந்நிலையில் எல்லாத்துறையிலும் ஊழல் நடப்பதாக கூறியுள்ள கமல், அதற்கு மக்கள் குரல் கொடுப்பார்கள் என கூறியுள்ளார். மேலும் தன் துறையான சினிமா துறையில் நடைபெறும் ஊழல் குறித்து தான் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்கள் நடப்பதாகவும் அவர் கூறிள்ளார். தன்னை போல் வெகு சிலரைத் தவிர மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

தான் இந்த ஊழலுக்கு குரல் கொடுக்கப்பதாகவும் அவர் கூறியுள்ளார். துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Punish the culprits not the Lawyers says Kamal Hassan-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal Hassan has said that the government's corruption vessel will be filled if the cinema people gives voice. He also pointed out that he is giving voice for the corruption in his field.
Please Wait while comments are loading...