ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சேலத்தில் போராட்டம் நடத்திய ஜிவி பிரகாஷ்!
ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதி கோரி சேலத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் போராட்டம் நடத்தினார்.
சேலம்: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் சேலம் அருகே தர்ணா போராட்டத்தை இன்று நடத்தினார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். இதற்காக கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலையும் வெளியிட்டிருந்தார்.

அலங்காநல்லூரில் நேற்று நடத்திய இளைஞர்களின் போராட்டத்துக்காக விடிய விடிய சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டினார் ஜிவி பிரகாஷ்குமார். இதனிடையே சேலம் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜிவி பிரகாஷ்குமார் சென்றிருந்தார்.
ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சேலத்தில் ஜிவி பிரகாஷ் குமார் தர்ணா போராட்டம் நடத்தினார். அவருடன் நாம் தமிழர் கட்சியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாலையில் போராட்டத்தை முடித்துக் கொண்ட ஜிவி பிரகாஷ், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதலுக்குள்ளாகி வாடிப்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை நேரில் பார்க்க செல்கிறேன் என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications