ராம்குமாருடன் என்ன தொடர்பு? சுவாதி கொலை குறித்து திருமாவளவனிடம் விசாரிக்க ஹெச். ராஜா வலியுறுத்தல்
சென்னை: சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை வழக்கு பற்றி தொடர்ந்து பல்வேறு தகவல்களைத் தெரிவித்து வருவதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனிடம் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஹெச். ராஜா கூறியதாவது:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்டது பற்றி பல்வேறு தகவல்களை திருமாவளவன் கூறிவருகிறார். சுவாதி முஸ்லிமாக மதம் மாற இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். அவருக்கு இந்த தகவலை சொன்னது யார்? சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறது.

இந்துவாக மாற திட்டம்
எங்களுக்கு கிடைத்த தகவல்படி அந்த பையன் இந்துவாக மாறி சுவாதியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் அதற்காக சைவ உணவுக்கு அவர் மாறியதாகவும் சொல்கிறார்கள். அவர் இந்துவாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சுவாதியை கொலை செய்துவிட்டதாக பேசுகிறார்கள்.

ராம்குமாருடன் என்ன தொடர்பு?
இப்போது அதை திசை திருப்புவதற்காக திருமாவளவனை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு?

புதிது புதிதாக தகவல்கள்...
இந்த கொலை பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. யாரும் எதுவும் பேசாத நிலையில் திருமாவளவன் புதிது புதிதாய் தகவல்களை சொல்கிறார்.

தேவைப்பட்டால் கைது
எனவே இந்த வழக்கில் பல உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே சுவாதி கொலை தொடர்பாக போலீசார் திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஹெச். ராஜா கூறியுள்ளார்.

அன்று மவுனம்...
இதே சுவாதி கொலை வழக்கில் பிலால் மாலிக் என்பவருக்கு தொடர்பிருப்பதாக முதலில் சமூக வலைதளங்களில் செய்தியைப் பகிர்ந்தவர்கள் நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரனும் எஸ்.வி.சேகரும்தான்... அப்போது இருவரிடமும் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று ஹெச். ராஜா கோரிக்கை விடுக்கவில்லை.. தேவைப்பட்டால் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் ஹெச். ராஜா வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications