Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாயுடன் கள்ளக்காதல், மகள்களை சீரழிக்க முயற்சி.. சென்னையில் 4 பெண்களை கொன்று கைதான கொடூரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 இளம் பெண்களின் தாயுடன் கள்ளக்காதல் வைத்ததோடு, காதலியின் மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் கள்ளக்காதலன் வலியுறுத்தியதும், அதை தொடர்ந்த தகராறும், 4 பெண்கள் உயிரை பறித்துள்ளது.

சென்னை, ராயப்பேட்டை பகுதியில் நடந்த 4 பெண்கள் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையில்தான் இந்த திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

ராயப்பேட்டை முத்து தெருவில் ராஜபகதூர் என்பவரது வீட்டில், முதல் தளத்தில், வாடகைக்கு வசித்து வந்தவர் சின்னராஜ் (35). இவருடன் பாண்டியம்மாள் (38) என்ற பெண்ணும், அவரின் மகள்கள் பவித்ரா (18), பரிமளா (18), சினேகா (16) ஆகியோரும் வசித்து வந்தனர்.

சின்னராஜ் இனிப்பு கடைகளுக்கு ஸ்வீட் தயாரித்து சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். பாண்டியம்மாள் தனது மனைவி என்றும், 3 இளம் பெண்களும் தன்னுடைய மகள்கள் என்றும், அண்டை வீட்டாரிடம் சின்னராஜ் தெரிவித்து வந்தார்.

படிப்பு

படிப்பு

இதில் பவித்ரா, சோழிங்கநல்லூரிலுள்ள, பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டயப் படிப்பு படித்து வந்தார். பிளஸ் 2 முடித்திருந்த பரிமளா, பாரா மெடிக்கல் படிக்க முயற்சித்து வந்தார். சினேகா, ராயப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

துர்நாற்றம்

துர்நாற்றம்

இந்நிலையில், திங்கள்கிழமை இரவுக்கு பின்னர் சின்னராஜ் வீடு திறக்கப்படாமலேயே இருந்துள்ளது. சின்னராஜ் மட்டும் வீட்டுக்கு இரவு வந்து தங்குவது, அவ்வப்போது வந்து செல்வது என இருந்துள்ளார். இதற்கிடையே, வியாழக்கிழமை சின்னராஜ் வீட்டில் அதிகமாக துர்நாற்றம் வீசியுள்ளது.

எலி பிரச்சினை

எலி பிரச்சினை

வீட்டின் உரிமையாளர் ராஜாபகதூர், சின்னராஜிடம், துர்நாற்றம் வீசுவது குறித்து கேட்டுள்ளார். வீட்டில் எலி இறந்து கிடப்பதாகவும், அதை சுத்தம் செய்துவருவதாகவும், சின்னராஜ் கூறியுள்ளார். எலியொன்றையும் தூக்கி காட்டியுள்ளார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

வியாழக்கிழமை இரவு மேலும் அதிகமாக துர்நாற்றம் வீசியதால், அங்கு யாராலும் இருக்க முடியவில்லை. சின்னராஜும் வீட்டு பக்கம் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜா பகதூர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவலறிந்த ராயப்பேட்டை போலீஸார், அங்கு விரைந்து வந்து சின்னராஜ் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

நான்கு கொலை

நான்கு கொலை

வீட்டுக்குள், அப்போது பாண்டியம்மாள், பவித்ரா, பரிமளா ஆகியோர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டும், சினேகா அயன் பாக்ஸ் வயரால் கழுத்து இறுக்கியும் கொலை செய்யப்பட்டும் கிடப்பதை பார்த்து பரிசீலனை நடத்தினர்.

அதிரடி கைது

அதிரடி கைது

இதையடுத்து, தலைமறைவாக இருந்த சின்னராஜுவை, போலீஸார் தேடினர். இதற்கிடையே மெரீனா கடற்கரையில் சின்னராஜை போலீஸார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவிலேயே 4 பேரையும் சின்னராஜ் கொலை செய்ததும், பின்னர் 4 நாள்கள் சடலங்களுடன் அவர் அந்த வீட்டிலேயே தங்கியிருந்ததும் தெரியவந்தது. துர்நாற்றம் அதிகரித்ததால் தலைமறைவானதாகவும் தெரியவந்தது.

நண்பன் மனைவி

நண்பன் மனைவி

இதுகுறித்து சின்னராஜு அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த சின்னராஜ், 2012ல், திண்டுக்கல் மாவட்டம் பழநியில், ஒரு பேக்கரியில் வேலை பார்த்துள்ளார். அப்போது, அருகே இருந்த தேநீர் கடையில் வேலை பார்த்த, சிவகங்கை மாவட்டம், கட்டயம்பட்டியைச் சேர்ந்த, சின்னதுரையுடன் நெருங்கி பழகி உள்ளான்.

கள்ளக்காதல் ஜோடி

கள்ளக்காதல் ஜோடி

பழநியில், வாடகை வீட்டில் குடியிருந்த சின்னதுரையின் வீட்டிற்கு, சின்னராஜ் அடிக்கடி சென்று வந்த போது, சின்னதுரையின் மனைவி பாண்டியம்மாளுக்கும், அவனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை, பாண்டியம்மாளின் கணவர் கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில், கள்ளக்காதல் ஜோடி, பழநியை விட்டு வெளியேறி சென்னையில் குடியேறியுள்ளது. பாண்டியம்மாள் தனது 3 மகள்களையும் உடன் கூட்டி வந்துவிட்டார்.

படிப்பு செலவு

படிப்பு செலவு

பாண்டியம்மாளின் மூன்று மகள்களின் படிப்பு செலவை சின்னராஜ் கவனித்து வந்த நிலையில், மூத்த மகள் பவித்ரா மீது சின்னராஜுக்கு ஆசை பிறந்துள்ளது. பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பாண்டியம்மாளிடம் பேச்சு கொடுத்துள்ளார் சின்னராஜு.

காதலிக்கு கடும் கோபம்

காதலிக்கு கடும் கோபம்

தனது ஆசை காதலனுக்கு, தனது மகளையே திருமணம் செய்து வைப்பதா.. தன்னுடன் படுக்கையை பகிர்ந்தவனை, மகளுடன் படுக்கையை பகிர அனுமதிப்பதா.. என கடுமையாக கோபமடைந்தார் பாண்டியம்மாள். சின்னராஜுவை கடுமையாக திட்டி அவரிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார்.

வெளியே போ..

வெளியே போ..

தனிமையில் இருக்கும்போது, சின்னராஜு, பவித்ராவை பலாத்காரம் செய்துவிட வாய்ப்புள்ளதாக சந்தேகித்த பாண்டியம்மாள், தான் இல்லாத நேரத்தில் சின்னராஜுவை வீட்டுக்குள்ளே அனுமதிப்பதில்லை. இதனால் வீடு இருந்தும், மெரினா பீச்சில் படுத்து கிடந்து காலத்தை ஓட்டியுள்ளார் சின்னராஜு.

மதம் பிடித்த யானை

மதம் பிடித்த யானை

இரவில் சின்னராஜுவை வீட்டுக்குள் அனுமதித்தாலும், படுக்கையறைக்குள் அவரைவிடுவதில்லையாம். கடந்த 6 மாதங்களாக சின்னராஜுவை உடலுறவு செய்ய அனுமதிக்காமல் பாண்டியம்மாள் தவிக்கவிட்டதால் வெறி தலைக்கேறியது சின்னராஜுவுக்கு.

இரண்டும் போச்சே

இரண்டும் போச்சே

தனது பணத்தில் மகள்களை படிக்க வைத்துவிட்டு தன்னையும் பட்டினி போட்டுவிட்டாரே பாண்டியம்மாள் என சின்னராஜு ஆத்திரமடைந்துள்ளார். பவித்ராவை அனுபவிக்க எண்ணி, கடைசியில் பாண்டியம்மாளிடம் கிடைத்த அரவணைப்பும் போய்விட்டதே என்ற ஏக்கமும் சின்னராஜுவை சூடேற்றியது.

யாராவது வாங்களேன்

யாராவது வாங்களேன்

இந்நிலையில்தான், கடந்த திங்கள்கிழமை, 3 மகள்கள் முன்னிலையில், பாண்டியம்மாளை உடலுறவுக்கு அழைத்துள்ளார் சின்னராஜு. அவர் அதற்கு வர மறுக்கவே, நீ வரவேண்டாம். பவித்ராவை பெட்ரூமுக்கு அனுப்பி வை, அது போதும் என்று கேட்டு கெஞ்சியுள்ளார். கடும் கோபமடைந்த பாண்டியம்மாள் சின்னராஜுவை பிடித்து தள்ளிவிட்டு 3 மகள்களுடன் பெட்ரூமில் படுத்துவிட்டார்.

அடுத்தடுத்து கொலை

அடுத்தடுத்து கொலை

கோபத்தில் தூங்காமல் இருந்த சின்னராஜு, நள்ளிரவு நேரத்தில் எழுந்து இரும்பு கம்பியால் பாண்டியம்மாளையும், அவரின் 2 பெண் பிள்ளைகளையும் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்து கத்திய சினேகாவை அயன் பாக்ஸ் வயரால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்துள்ளார் சின்னராஜு.

ஸ்ப்ரே அடித்த கொலையாளி

ஸ்ப்ரே அடித்த கொலையாளி

கொலையை எப்படி மறைக்க என தெரியாமல், வீட்டில் தங்கியிருந்தபடி பினாயில் வாங்கி தெளித்தும், வாசனை திரவியங்களை ஸ்ப்ரே செய்தும், பிணங்களுடனேயே தங்கியிருந்துள்ளார் சின்னராஜு. இதன்பிறகு துர்நாற்றம் அதிகரித்ததால் தலைமறைவாகி போலீசில் பிடிபட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+