For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூமிக்கடியில் 20 அடி ஆழத்தில் சிவன் கோயில்.. பக்தரின் கனவு பலித்தது: வீடியோ

பூமிக்கடியில் 20 அடி ஆழத்தில் சிவன் கோயில் இருப்பதாக திருக்காம்புலியூரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்குக் கனவு வந்தது. அதையடுத்து அங்கு தோண்டிப் பார்த்த போது சிவலிங்கமும் நந்தியும் இருப்பது கண்டுபிடிக்க

By Suganthi
Google Oneindia Tamil News

கரூர்: கரூர் அருகே 20 அடி ஆழத்தில் சிவன் கோயில் இருப்பதாகப் பக்தர் ஒருவருக்குக் கனவு வந்தது. அதேபோல் அவ்விடத்தில் தோண்டியபோது லிங்கம் மற்றும் நந்திச் சிலை கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரைச் சேர்ந்தவர் சரவணன். பிரதோஷ தினமான நேற்று அவர் கனவில் இறைவன் தோன்றி அவருடைய ஊரின் ஒரு பகுதியில் 20 அடி ஆழத்தில் சிவ ஆலயம் இருப்பதாகக் கூறியதாக அவர் ஊர் மக்களிடம் கூறினார்.

In karur a youngster dream came into real

அதையடுத்து, அவர் கூறியதை நம்பிய ஊர்மக்கள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அவர் கூறிய இடத்தைத் தோண்டினர். அப்போது 20 அடி ஆழத்தில் சிவ லிங்கமும் நந்தியும் இருந்தது. அதை எந்தச் சேதமும் இல்லாமல் தோண்டி வெளியே எடுத்தவுடன் தாசில்தாருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகளுக்குத் தாசில்தார் தகவல் கொடுத்தார். இந்நிலையில், சிலையை அதே ஊரில் வைத்துக் கோயில் கட்டித் தர வேண்டும் என திருக்காம்புலியூர் பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
A young man dream came into true as he dreams lord siva temple in his native and when people stated to bury that place they found siva linga and Nandhi statue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X