For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிரட்டும் டெங்கு- நிலவேம்பு கசாயத்தை நாடும் பொதுமக்கள்

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளதால் நில வேம்பு கசாயத்தை பருகுவோர் அதிகரித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளதால் நில வேம்பு கசாயத்தை பருகுவோர் அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2012ம் கால கட்டத்தில் ஏடிஎஸ் கொசுக்களின் பெருக்கத்தால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அப்போது முதல் ஆண்டுதோறும் இந்த காய்ச்சல் பரவி பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தி வருகிறது.

Intake of Nilavembu Kudineer increased in Tirunelveli district

கோடை காலத்தில் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தொடர் நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுக்குள் இருந்தாலும் இந்தாண்டு முதல் மீண்டும் டெங்கு பரவி வருகிறது.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் 2012ம் வருட சம்பவம் திரும்பி விடக்கூடாது என்பதில் சுகாதார துறையினர் தீவிரமாக இருக்கின்றனர்.

பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் நேரிடையாக பார்வையிட்டு மருந்து தெளித்து வருகின்றனர். ஆனாலும் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

Recommended Video

    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது-சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி-வீடியோ

    இதனால் சித்த மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாள்தோறும் அதிகாலையில் 5 மணி முதலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அரசு சித்த மருத்துவமனைக்கு படையெடுத்து இலவசமாக வழங்கப்படும் நில வேம்பு கசாயத்தை வாங்கி பருகி வருகின்றனர்.

    இது போல் தனியார் மருத்துவமனை கடைகளிலும், சித்த மருந்து கடைகளிலும் நிலவேம்பு பொடியை வாங்கி செல்வோர் அதிகரித்து வருகின்றனர்.

    English summary
    In Tirunelveli district more people taking Nilavembu Kudineer are increased.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X