Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொட்டை அடிக்கப்பட்ட ஈசா யோகா மைய பெண்கள் வீடியோ வெளியீடு- பெற்றோர் கதறல்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஈஷா யோகா மையத்தில் பெண்கள் ஊக்கமருந்து அளிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறியுள்ள நிலையில், யாரும் தங்களை கட்டாயப்படுத்தவில்லை எனவும் சுய ஆர்வத்துடன் சன்னியாசி ஆனதாக இரண்டு பெண்களும் விளக்கம் அளிக்கும் வீடியோ காட்சிகளை ஈஷா யோகா வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்து கதறிய பெற்றோர்கள், நிர்பந்தம் காரணமாகவே தங்களின் குழந்தைகள் இவ்வாறு பேசியிருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை வெளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையம், கீதா , லதா என்ற தனது இரண்டு மகள்களையும் மூளைச்சலவை செய்து ஏமாற்றி சன்னியாசி ஆக்கிவிட்டதாகவும், இரு மகள்களையும் மீட்டுத்தர வேண்டும் என்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் காமராஜ், அவரது மனைவியும். கடந்த திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சன்னியாசம் ஏற்றுக்கொண்ட சகோதரிகள் கீதா, லதா ஆகிய இருவரும் 5 நிமிடங்கள் பேசும் வீடியோவை ஈஷா யோகா மையம் வெளியிட்டது. அதில் ஈஷாவில் சன்னியாசியாக இருப்பது பெருமைப்படுவதாகவும், யாருடைய கட்டாயத்தின் பேரில் இல்லாமல் சுய விருப்பத்துடன் அந்த மையத்தில் தங்கி இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

நாங்கள் சன்னியாசிகளாக இருப்பது பெற்றோர்களுக்கு பிடிக்காத காரணத்தினாலே இவ்வாறு புகார் அளித்திருப்பதாகவும் அவர்கள் தங்களின் பேட்டியில் கூறியுள்ளனர். ஆனால் தங்களது மகள்கள் ஈஷா மையத்தின் நிர்பந்தமாகவே இப்படி பேசியிருப்பதாக அப்பெண்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஈஷா மையத்தில் தங்களது மகள்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர். சரியான சாப்பாடு இன்றி உண்ணும் உணவில் வசியமருந்து கலக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

ஈஷா யோகா மையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்குவதாக கூறிய அப்பெண்களின் பெற்றோர், இதனால் தங்கள் மகள்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர். நாங்கள் பார்க்கச் செல்லும் போது எல்லாம் எங்களுடன் வந்து விடுவதாக கூறிய அவர்கள் இப்போது இப்படி பேசுவதற்கு நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர்.

நான்தான் கடவுள்னு சொல்லியும், மோட்சம் தருவதாகச் சொல்லியும் அவர்களை மூளைச்சலவை செய்து இப்படி பண்ணிட்டார் ஜக்கி வாசுதேவ். இத்தனை வருஷம் எங்க பொண்ணுங்களை மூளைச்சலவை செஞ்சு, அங்கேயே வெச்சுக்கிட்டு, இப்போ எங்களை பாக்க முடியாதபடி பண்ணிட்டாங்க. என்று கண்ணீர் விடுகின்றனர் காமராஜ்- சத்திய ஜோதி தம்பதி.

ஈஷாவில் பெண்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள், தீர்ந்தங்கள் போன்றவை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அங்குள்ள அனைவரின் இரத்தங்கள் சோதனை செய்யப்பட வேண்டும் எனவும் வவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு கவனத்தில் கொண்டு யோகா மையத்தில் நடைபெறும் பல்வேறு மோசடிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+