எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்... ஜெயலலிதா நிர்வாகம் மிக மோசமான நிர்வாகம்.. ராமதாஸ்
சென்னை: ஜெயலலிதா அரசின் நிர்வாகம் நல்ல நிர்வாகம் அல்ல. மிக மோசமான நிர்வாகம். இதை எந்த மேடையில் வேண்டுமானாலும் வந்து சொல்ல நான் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தி.நகர் பஸ் நிலையம் அருகில் பாமக சார்பில் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை விளக்கிப் பேசினார். அவரது பேச்சிலிருந்து...

மோசமான நிர்வாகம்
தமிழகத்தில் ஜெயலலிதா அளித்து வரும் நிர்வாகம் நல்ல நிர்வாகம் அல்ல. இதை எந்த மேடையில் வேண்டுமானாலும் பேச தயாராக இருக்கிறேன். அதிமுக சார்பில் யார் வேண்டுமானாலும் இது குறித்து என்னிடம் விவாதிக்கலாம். இதை சொன்னால் என் மீது அவதூறு வழக்கு தொடருவார்கள்.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
தற்போதைய ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல். உலக முதலீட்டாளர் மாநாட்டிற்காக சாலையெங்கும் மேடைகள் அமைத்து குத்தாட்டம் போட்டு ஜெயலலிதாவின் படங்களை பேனர்களாக வைத்து இருந்தனர்.

தலையில்தான் அடித்திருப்பார்கள்
இதைப் பார்த்து மாநாட்டிற்கு வந்தவர்கள் தலையில் தான் அடித்து கொண்டிருப்பார்கள். முதல்வர் கூறியபடி முதலீடா வரப்போகிறது? நிச்சயம் ஒரு முதலீடும் வராது.

விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு
விஷ்ணு பிரியா கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஒவ்வொரு மணித்துளியும் பாமகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நேர்மையான முதல்வரா நீங்கள்?
நேர்மையான முதல்வராக இருந்தால் ஜெயலலிதா வரும் தேர்தலில் காசு கொடுக்க மாட்டேன் என்று அறிவிக்க தயாரா? தமிழ்நாடு தற்போது ஐசியூவில் இருக்கிறது.

அமைச்சர்களே முதல்வரைப் பார்க்க முடியவில்லை
அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஊழல் மாறி விட்டது. அமைச்சர்களே கூட முதல்வரை பார்க்க முடியாது என்ற நிலை தான் உள்ளது.

வீடியோவில் மட்டுமே முதல்வரைப் பார்க்க முடிகிறது
தனி மனிதருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள். காணொலி காட்சி மூலம் மட்டுமே முதல்வர் அனைத்து திட்டங்களையும் திறந்து வைக்கிறார். தற்போதைய ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. மொத்தத்தில் சுனாமி ஊழல் கட்சியாக அதிமுக தற்போது விளங்கி வருகிறது என்று காட்டமாக பேசினார் டாக்டர் ராமதாஸ்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications