Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

28 அமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார். முதல்வராக ஜெயலலிதாவும், 28 புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

Jaya to meet Governor

அதிமுக எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் நேற்று சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம். இதைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.

அதன்படி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆளுநரைச் சந்திக்கக் கிளம்பினார் ஜெயலலிதா. போயஸ் தோட்ட வீட்டிலிருந்து ராஜ்பவன் வரை வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கில் குவிந்து விட்ட அதிமுக தொண்டர்களால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது, போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் வீட்டை விட்டு இன்று வெளியே வந்தார். அவர் செல்லும் பாதை நெடுங்கிலும் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கூடி நின்று ஆட்டம் பாட்டத்துடன் பூ தூவி வரவேற்றனர். பஸ்கள் ரூட் மாற்றம், கடும் வெயில் உள்ளிட்டவை காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்கும், துயரத்துக்கும் உள்ளானார்கள். இப்படியாக ஜெயலலிதா ராஜ்பவன் வந்து சேர்ந்தார்.

Jaya to meet Governor

அங்கு ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்தார். அவரிடம் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தன்னை சட்டசபை கட்சித் தலைவராக அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தது தொடர்பான தீர்மான நகலையும் ஆளுநரிடம் வழங்கினார். அமைச்சரவைப் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் கொடுத்தார்.. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவும், ரோசய்யாவும் ஆலோசனை நடத்தினர்.

பிரமாண்ட வரவேற்பு

முன்னதாக ஆளுநர் மாளிகைக்கு ஜெயலலிதா வந்து சேர்ந்தபோது அவருக்கு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். நாடி நரம்புகள் புடைக்க அம்மா, அம்மா, அம்மா என்று அவர்கள் போட்ட கோஷம் காதுகளைக் கிழித்தது.

Jaya to meet Governor

சரியாக 2.02 மணிக்கு ஜெயலலிதாவின் கார் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தது. ஜெயலலிதா, ஆளுநர் சந்திப்பின் போது முக்கிய அதிமுக பிரமுகர்களும் உடன் இருந்தனர். பொக்கே கொடுத்தார் ரோசய்யா ஜெயலலிதாவை வரவேற்ற ஆளுநர் ரோசய்யா அவருக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஆளுநரின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா ஆளுநர் மற்றும் அவருடன் அவரது மனைவி ஆகியோரிடம் நலம் விசாரித்தார்.

28 அமைச்சர்களுடன் ஜெயலலிதா நாளை பதவியேற்பு

ஜெயலலிதா இன்று காலை 11 மணியளவில் பதவியேற்கிறார். மேலும் அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவையில் இருந்த பழைய முகங்கள் அப்படியே மீண்டும் அமைச்சராகிறார்கள். உடல் நலமில்லாமல் இருக்கும் செந்தூர்பாண்டியன் மற்றும் ஆனந்த் ஆகியோர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் பதவியேற்பு விழா இன்று நடைபெறவுள்ளது.

ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், சில மாநில முதல்வர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+