For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தப்பிக்கவே முடியாது: சு.சுவாமி திட்டவட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்றும் அவர் இந்த வழக்கில் இருந்து தப்பவே முடியாது என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா ஒருபோதும் தப்ப முடியாது. வழக்கு அந்தளவு வலுவாக உள்ளது.

Jaya's appeal should be reject, says Swamy

மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இத்தனை சொத்துக்களை எப்படி வாங்க முடியும்?. எனவே இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்ப வாய்ப்பே இல்லை.

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு நீதிபதியால் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்றுதான் கருதுகிறேன்.

நில கையகப்படுத்தும் சட்டம், சாலை பாதுகாப்பு சட்டம், புதிய இன்சூரன்ஸ் மசோதா போன்றவற்றுக்கு எதிர்ப்பு இருந்தாலும், தனி மெஜாரிட்டி பெற்றிருப்பதால் அந்த சட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்காது.

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா என்பதை இப்போது கணிக்க வேண்டியதில்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதியின் குடும்பம், மாறன், சிதம்பரம் என எல்லோரும் சிறைக்கு செல்வது உறுதி. வழக்கு விசாரணை சற்று தாமதமாகலாமே தவிர வழக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது.

அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்றுதான். நாட்டுக்கு துரோகம் செய்வது, ஊழல் செய்வதுதான் அவர்களின் கொள்கை.

அருண் ஷோரி இப்போது பாரதிய ஜனதாவில் இல்லை. யாரைப்பற்றியும் கருத்துக் கூற அவருக்கு உரிமை இருக்கிறது. அது அவரது கருத்து.

யாருக்கு தாலி போட இஷ்டம் இல்லையோ அவர்கள் போட்டுக்கொள்ள வேண்டாம். அதற்காக விழா நடத்துவது என்பது தேச துரோக வேலை. இது மாதிரி செய்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

English summary
Senior BJP leader Subramanian Swamy said that Jayalalithaa's appeal in assets case should be rejected by Karnataka High court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X