தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல அகராதியில் வார்த்தைகளே இல்லை.. ஜெ. உருக்கமான பேட்டி
சென்னை: நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றி உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அதிமுக வெற்றிமுகத்தில் இருக்கும் தகவல் வெளியானதும், முதல்வர் ஜெயலலிதாவை, அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும், காலில் விழுந்தும், வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, இதன்பிறகு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது, நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றி உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை.

1984ம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி தேர்தலில் மீண்டும் வெல்வது என்பது இப்போதுதான் நிகழ்ந்துள்ளது.
10 கட்சிகள் எதிர்த்தபோதும் நான் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். மகேசன் என்றால் மக்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
தமிழக மக்கள் என்னை கைவிடவில்லை, என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களால் நான்... மக்களுக்காகவே நான் என்பதே பிரசாரத்தில் தாரக மந்திரம். எனக்கென்று வேறு தனிப்பட்ட வாழ்க்கை கிடையாது. எனது வாழ்வு தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
மக்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். மக்கள் தொண்டில் எனது வாழ்வை கழிப்பேன். தமிழக மக்களுக்கு என்னென்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications