தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிர்ப்பு – கி.வீரமணி வீடு முற்றுகை… பஸ் மீது கல் வீசியவர்கள் கைது
சென்னை: கடுமையான எதிர்ப்பையும் மீறி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுடன் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் தாலி அகற்றும் நிகழ்வுக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஸ் மீது கல்வீச்சு, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் வீடு முற்றுகை என போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தாலி அகற்றும் போராட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இந்த தாலி அகற்றும் போராட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி அக்னிஹோத்ரி வீட்டில் 8 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

கல்வீச்சு
இந்நிலையில், இந்த தாலி அகற்றும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பூந்தமல்லியில் நள்ளிரவில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியினர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்தன. இந்த தாக்குதல் சம்வத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கி.வீரமணி வீடு முற்றுகை
திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டை, இந்து மகா சபை அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 10 பேரை கைது செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications