Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் 'குமாரசாமி' யார் தெரியுமா? கருணாநிதி சாடல் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரானைட் முறைகேடு வழக்குகளிலிருந்து பி.ஆர்.பழனிச்சாமியை விடுவித்த மேலூர் நீதிபதியை, தமிழகத்தின் குமாரசாமி என திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:

கேள்வி: கிரானைட் அதிபரை விடுதலை செய்த மேலூர் மாஜிஸ்திரேட் பற்றி இரண்டு வார்த்தைகள்?

கருணாநிதி: தமிழக குமாரசாமி!

கேள்வி: தேசிய நெடுஞ்சாலைத் துறையில், அ.தி.மு.க. ஆட்சியில் அக்கறை காட்டப்பட வில்லை, அலட்சியம்தான் காட்டப்பட்டது என்று கூறப்படுவதைப் பற்றி?

கருணாநிதி: தேசிய நெடுஞ்சாலைத் துறையில் எந்த அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் அலட்சியம் காட்டப்பட்டது என்று "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளிதழ் மார்ச் மாதம் 14ஆம் தேதி எழுதியிருந்ததை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தேன்.

 karunanidhi statement about Judgement error of PRP case

அதனை மெய்ப்பிக்கும் அளவுக்கு, திமுக ஆட்சியிலும், தற்போது அ.தி.மு.க. ஆட்சியிலும் எந்த அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டது என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால், 2008-2009ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 2,872 கோடி ரூபாய்க்கான பணிகளும், 2009-2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 3,214 கோடி ரூபாய்க்கான பணிகளும், 2010-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 5,143 கோடி ரூபாய்க்கான பணிகளும், 2011-2012ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 7,283 கோடி ரூபாய்க்கான பணிகளும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் 2012-2013ஆம் ஆண்டு 1,933 கோடி ரூபாய்க்கான பணிகளும், 2013-2014ஆம் ஆண்டு 2,423 கோடி ரூபாய்க்கான பணிகளும் மட்டுமே வழங்கப்பட்டன என்றால், எந்த அளவுக்கு தமிழக அரசு அக்கறையற்ற தன்மையில் செயல்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கேள்வி: அ.தி.மு.க. அரசுக்கு வழங்கப்பட்ட இலவசக் கிரைண்டர்களுக்கு பணம் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைதானா?

கருணாநதி: இலவசக் கிரைண்டர்களை அரசுக்கு கொடுத்த அதன் தயாரிப்பாளர்களுக்கு 400 கோடி ரூபாய் இன்னும் தரப்பட வேண்டுமாம். வங்கிகளிடம் கடன் பெற்று இலவசக் கிரைண்டர்களை அரசுக்கு வழங்கியவர்கள், வங்கிகளுக்கு கடன் கட்ட முடியாமல் சிரமப்படுகிறார்களாம். அரசிலே உள்ளவர்களிடம் கேட்டால், நாங்கள் உங்களுக்கு மட்டுமா கடன்பட்டிருக்கிறோம் என்று கிண்டல் செய்கிறார்களாம்!

கேள்வி: தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் வாங்குவதைக் குறைத்திருந்த மின்வாரியம், மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குகிறதாமே?

கருணாநிதி: தமிழ்நாடு மின்வாரியம் மதுரை பவர் என்ற நிறுவனத்திடம் 106 மெகாவாட்டும், பிள்ளை பெருமாள் நல்லூர் நிறுவனத்திடம் 330.50 மெகாவாட்டும் மின்சாரம், ஒரு யூனிட் 12 ரூபாய் வீதம் விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்து ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்தது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் புகார் கூறியதை அடுத்து, இந்த நிறுவனங் களிடம் மின்சாரம் வாங்குவதைத் தவிர்த்து வந்தது.

ஆனால் தற்போது மார்ச் 14, 15, 16 ஆகிய நாட்களிலும், மார்ச் 24, 25 ஆகிய நாட்களிலும் இந்த நிறுவனங் களிடமிருந்து மின்சாரம் ஒரு யூனிட் 5.50 ரூபாய் என்ற விலையில் வாங்கியிருக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவை இன்னும் அதிகமாகும். ஆனால் அதுபற்றியெல்லாம் அ.தி.மு.க. அரசு கவலைப்படுவதாகவோ, ஆலோசனை நடத்துவ தாகவோ எந்தச் செய்தியும் இல்லை.

கேள்வி: தமிழக அ.தி.மு.க. அரசின் மீது கூறப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எந்தப் பதிலும் தருவதில்லையே?

கருணாநிதி: இதைப்பற்றி இந்த வார இதழ் "ஆனந்த விகடன்", "பேசுங்கள் முதல்வரே" என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சில முதல்வர்கள் தங்கள் மாநிலத்துக்கு ஒரு வேலை ஆக வேண்டுமென்றால், டெல்லிக்கே நேரடியாகச் சென்று முகாமிட்டு காரியத்தைச் சாதித்துக் கொண்டு திரும்புகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, வலிய வருவோரையும் சந்திக்க மறுக்கிறார் எனில் அவரது எண்ணம்தான் என்ன? இது அலட்சியமா, ஆணவமா, அதிகாரத் திமிரா அல்லது போயஸ் தோட்ட வாசலில் நிற்கும் கட்சிக்காரர்களின் வரிசையில், மத்திய அமைச்சரும் நிற்க வேண்டும் என எதிர்பார்க்கிறாரா?

இது தேர்தல் காலம். தங்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் வாதிகள் முண்டி அடித்துக் கொண்டு பதில் அளிக் கிறார்கள். ஏனெனில் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கும்போது, "நாங்கள் மக்களுக்காகத்தான் உழைக்கிறோம்" எனக் காட்டிக் கொள்ள வேண்டி யிருக்கிறது. இந்த பாவனைகூட ஜெயலலிதாவிடம் இல்லை.

ஓர் இறுக்கமான மௌனத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். கோடிக்கணக் கான மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர், மறுபடியும் அதே பதவிக்கு வர விரும்பும் ஒருவர், மக்களுடன் உரையாடுபவராக இருக்க வேண்டும்; நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில், தன் கருத்து என்ன எனச் சொல்பவராக இருக்க வேண்டும். முதலில் முதல்வர் ஜெயலலிதா மௌனம் கலைக்கட்டும்" என்று எழுதியிருப்பதே தக்கப் பதிலாக இருக்க முடியும்.

கேள்வி: 2015ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 501 கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள் மட்டுமே கிடைத்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தைத் தெரிவித் திருந்தீர்கள்; அதற்கு முந்தைய ஆண்டு களில் எந்த அளவுக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்திற்குக் கிடைத்தன என்ற விவரம் கூற முடியுமா?

கருணாநிதி: 2011-2012 ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் 5-2-2011 அன்று படித்த நிதி நிலை அறிக்கையில் பக்கம் 30இல், "கடந்த ஐந்தாண்டுகளாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளின் வளர்ச்சி, தமிழகத்தில் மிகச் சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் 52,195 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளன" என்று வெளியிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியை எடுத்துக் கொண்டால், 13-2-2014 அன்று படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பக்கம் 31இல், "2011ஆம் ஆண்டு மே மாதம் முதல், இதுவரை 26,625 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 10,660 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன" என்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் ஒப்பிட்டு, எந்த ஆட்சியில் தொழில் முதலீடுகள் அதிகமாக தமிழகத்திற்குக் கிடைத் துள்ளன என்ற விவரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கருணாநதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+