Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

I am Hero; My Villain Kalaignar- Villie is Jayalalithaa... Good ah?.. விஜயகாந்த் கலக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: I am Hero... My Villain is Kalingar My Villei is Jayalalithaa... Good ah? என்று என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து பேசி அசத்தி இருக்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக என்.டி.டி.விக்கு விஜயகாந்த் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். என்.டி.டி.வியின் பிரண்ணாய் ராய் தலைமையிலான 3 பேர் கொண்ட டீம் விஜயகாந்திடம் ஆங்கிலத்தில் கேள்விகளை கேட்கிறது.

எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அதிரடியாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அசரவைக்கும் பதில்களை கூறியுள்ளார் விஜயகாந்த். இந்த தேர்தலில் உங்களது பங்கு என்ற கேள்விக்கு, I am hero.. My Villain is Kalingar- My Villei is Jayalalithaa... என்றுகூறிவிட்டு Good ah? என எதிர்கேள்வி கேட்க என்டிடிவி டீம் கலகலவென சிரித்து கொண்டே ஆமோதிக்கிறது.

இதனைத் தொடர்ந்து தாம் 94 வயது கருணாநிதி, 68 வயது ஜெயலலிதாவுடன் மோதுவதாக கூறிய விஜயகாந்த், இருவரது வயதும் சரியாக எனக்குத் தெரியாது என்றார். பின்னர் I don't care about the age, heart is young என பதிலளித்தார் விஜயகாந்த்.

அதிமுக, திமுக கட்சிகளுடன் கூட்டணி வைக்காதது ஏன் என்ற கேள்விக்கு பால்விலை, பஸ் கட்டணத்தை கூட்டிய 3 மாதங்களிலே வெளியே வந்தை சுட்டிக்காட்டிய விஜயகாந்த், First time Am one Seat, second time 41 seats winning 29 seats என ஆங்கிலத்தில் கூறினார். சங்கரன்கோவில், பென்னாகரம் இடைத்தேர்தல்களை சுட்டிக்காட்டிய அவர், பால்விலை உயர்வை இப்போது குறைப்போம் என்கிறார்கள்...காரணம் பயம் என்றார்.

ஜெயலலிதா, கருணாநிதியை நேரில் சந்திக்க நேர்ந்தால் எப்படி எதிர்கொள்வீர்கள் என்ற கேள்விக்கு, என்னைய பார்த்தா அந்த அம்மா மூஞ்சியை இப்படி திருப்பிக்கும்.. கருணாநிதியும் அப்படிதான் சார்... எம்.ஜி.ஆர்.கிட்ட பேசுனா போச்சு.. கருணாநிதியை பார்த்தா போச்சு.. 2 பேரையும் நான் பார்த்தா பேசமாட்டேன். நானும் அதேதான் திரும்பிக்குவேன்.. ஆனால் கருணாநிதி பேசுவார்... அவர் பேசினான நின்னு என்ன சார்னு மரியாதை செய்வோம். அவர் எதையும் தமக்கு சாதகமாக்கிக் கொள்பவர்... Advantage in Kalaingar என பதிலளித்தார்.

எப்படி அடுத்து ஆட்சி அமைப்போம் என சொல்றீங்க என்ற கேள்விக்கு, அரசாங்கத்தை உருவாக்குவதெல்லாம் மக்கள் ஹார்ட்... அனுபவம் அனுபவம்னு சொல்றதெல்லாம் ஹம்பக்.. Jayalalithaa Manifesto is humbug... Going on My manifesto First.. அதைப் பார்த்து அவங்களுக்கு பயம் வந்துருச்சு... திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் அள்ளி விடுறாங்க என்றார்.

எத்தனை சீட்டு ஜெயிப்போம்னு சொல்றதுக்கு நான் ஒன்னும் அஸ்ட்ராலஜர் இல்லை.. 120 சீட்டு இருந்தாலும் Win Win தானே... என்றார்.

நீங்கள் அதிகமாக மது அருந்துவதாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, நான்தான் வந்து செக் பண்ணுங்கன்னு சொல்லிட்டேன்... இப்ப யாரும் இதை சொல்றது இல்லை.. It is old... My Wife is challenge.... போன வருஷம் நான் பொங்கலுக்கே விழுப்புரத்தில் சொன்னேன்... அப்ப இருந்து இப்ப வரைக்கும் வாங்க செக் பண்ணுவோம்னு 3 தடவை சொல்லிட்டேன்...என்றார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த், ரேஷன் பொருட்களை வீடு தேடி கொடுப்போம்னு சொல்றோம்.. அதுல வேலை வாய்ப்பை உருவாக்குவோம்; 100 நாள் வேலை திட்டத்துல ரூ300; ரூ500 வாங்கித் தருவேன். என்றார்.

மற்றொரு கேள்விக்கு ஜெயலலிதா அதிகமாக லஞ்சம் வாங்கி இருக்காங்க... அதனால ஒரு தொகுதிக்கு ரூ10 கோடி செலவு செய்றாங்க.. இதனால எல்லாரும் அவங்க காலில் விழுறாங்க. தமிழ்நாட்டை தலைநிமிர செய்யுறதுக்கு முன்னாடி ஜெயலலிதா அவங்க ஆளுங்களை தலைநிமிர செய்யுங்கன்னு சொல்றேன்...அந்த அம்மாவுக்கு காலில் விழுவது பிடிக்குது.. அது என்ன Reason-ன்னு தெரியாது இதுவரைக்கும் அந்த அம்மா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+