தந்தை பெரியாரின் 43வது நினைவு தினம்.. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி #Periyar
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 43வது நினைவு தினம் தமிழகத்தில் இன்று பல அரசியல் கட்சி தலைவர்களாலும் அனுசரிக்கப்பட்டது.
சென்னை: தந்தை பெரியாரின் 43வது நினைவு நாள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை இன்று மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ரகுமான்கான், சுப்புலட்சுமி ஜெகதீசன், துணை பொதுச் செயலாளர் வி.வி.துரைசாமி, தொழிலாளர் அணி செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி, மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆர்.டி.சேகர், எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், ரவிச்சந்திரன், கு.க.செல்வம், தாயகம் கவி, வர்த்தகர் அணி கவிஞர் காசிமுத்து மாணிக்கம், வி.பி.மணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், அதிமுகவை தனது கைப்பாவையாக செயல்பட வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், பாஜக தமிழக மண்ணில் வேரூன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
காங். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பிறகு நிருபர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பெரியார் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்தினர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications