For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு திரும்பினார் லண்டன் மருத்துவர்!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து நாடு திரும்பினார் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே.

உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 -ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.

London specialist doctor return home

முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஜான் பீலே கடந்த 30 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை வந்தார்.

மருத்துவமனையில் முதல்வரின் உடல்நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள், உடல்நிலை குறித்த விவரங்கள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார். மேலும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர் குழுவினருடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையின் அடிப்படையில் நோய்த் தொற்றுக்கு முதல்வருக்கு ஏற்கெனவே வழங்கப்படும் சிகிச்சைகளோடு, நோய் எதிர்ப்புக்கான மருந்துகளை அளிக்கவும் பரிந்துரைத்தார். டாக்டர் பீலேவின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டாக்டர் பீலே ஞாயிற்றுக்கிழமை லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

English summary
Richard John Pele, the specialist doctor from London has returned to his home country after improvement in CM Jayalalithaa's health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X