ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியது திமுக - எம். நடராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையைத் தூண்டி விட்டது திமுகதான் என்று எம். நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை: அறவழியில் நடைபெற்று வந்த மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சிலரை ஊடுறுவ வைத்து அதில் வன்முறையை தூண்டி விட்டு கலவரத்திற்கு வித்திட்டது திமுகதான் என்று எம். நடராஜன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவர்கள் அமைதி வழியில் நடத்தி வந்த போராட்டத்திற்குப் போன திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மாணவர்கள் திருப்பி அனுப்பியதால் கோபமடைந்து திமுகவினர் வன்முறையைத் தூண்டினர் என்று கூறியுள்ளார் நடராஜன்.
திமுக தூண்டுதலின் பேரில்தான் மாணவர்கள் போராட்டத்தில் சிலர் ஊடுறுவினர். என்னுடைய புகாருக்கு ஆதராங்கள் உள்ளன. மாணவர் போராட்டத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்த திமுக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டைக்கு வந்த அவர் அங்கு ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது யாரும் கேள்வி கேட்கக் கூடாது. நான் கூறுவதை மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டுக் கூறியதாவது:

பீட்டா காங்கிரஸ்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை பெற்ற பீட்டா அமைப்பை இந்தியாவுக்குள் நுழைய அனுமதி அளித்தது காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த திமுக அமைச்சர் ஆ. ராசா தான். இதன் பின்னர் வந்த பாஜக அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தில் குடியரசு தலைவர் ஒப்புதல் இல்லாததால் ஜல்லிகட்டு நடத்துவதற்கு தடை பெறப்பட்டது. இதனையடுத்து தான் இந்தாண்டில் ஜல்லிகட்டு நடத்துவதற்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் தொடங்கியது.

மு.க.,ஸ்டாலினை திருப்பி அனுப்பியதால்
நல்ல நோக்கத்துக்காக தொடங்கிய மாணவர்கள் போராட்டம் 3 நாட்களுக்குப்பிறகு அங்கு சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை அரசியல் கட்சிகள் போராட்டத்துக்குள் நுழைய வேண்டாம் என திருப்பிய அனுப்பிய பிறகு தான் திமுக தூண்டுதலின் பேரில் மாணவர்கள் போராட்டத்தில் ஒரு சிலர் ஊடுருவினர். கருணாநிதி ஸ்டாலினுடன் இருப்பவர்கள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்தனர். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

கலவரத்தை உருவாக்கி
மாணவர்கள் போராட்டத்தை வைத்து தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி ஆட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் தான் அறவழியில் போராடிய மாணவர்களின் உணர்வுகளை மதிக்காமல் மாணவர்களின் போராட்டத்தை கொச்சை படுத்த வேண்டும் என்ற நோக்கில் ரயில் மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். அறவழியில் நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின் போது வன்முறைக்கு வித்திட்டது திமுக தான் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

ஆதாரம் உள்ளது
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. மாணவர்களின் போராட்டததை திசை திருப்பி வன்முறையை தூண்டிய ஸ்டாலின் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் போலீசாரும் அத்துமீறியதாகவும் பல கருத்துக்கள் நிலவுகிறது. எதுவாக இருப்பினும் வன்முறைக்கு வித்திட்டவர்கள் மீதும், விஷமிகள் மீதும் தவறு செய்த போலீசார் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள சட்டம் நிரந்தரமானது. இதை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார் நடராஜன்.
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்












Click it and Unblock the Notifications