கணவர், மனைவி இருவரில் ஒருவர் மதம் மாறாவிட்டாலும் அந்தத் திருமணம் செல்லாது....!
மதுரை: கலப்புத் திருமணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.
இரு மதத்தினர் கலப்புத் திருமணம் செய்யும்போது இருவருமே ஏதாவது ஒரு மத்திற்கு மாற வேண்டும். அப்படி இல்லாமல் ஒருவர் மட்டும் மாறி, இன்னொருவர் மாறாவிட்டால் அந்தத் திருமணம் செல்லாது என்று அந்தத் தீர்ப்பு கூறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று நீதிபதிகள் சிவக்குமார், ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதைத் தாக்கல் செய்திருந்தவர் ஒரு பெண்மணி. தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும் அந்தத் தாயார் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
திருமணம் செய்த அந்த கலப்புத் தம்பதிகளில் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஆண் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பழனி முருகன் கோவிலில் வைத்து மணம் புரிந்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அப்பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்படி இன்று அப்பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கிறிஸ்தவ ஆண் மதம் மாறாத பட்சத்தில் இந்து கோவிலில் நடைபெற்ற திருமணம் எப்படி முறைப்படி செல்லும் என்று கேள்வி எழுப்பினர்.
இருப்பினும் அந்த பெண் திருமணம் செய்து கொண்ட ஆணுடனே செல்வதாக பிடிவாதமாக கூறினார். இதையடுத்து சட்டப்படி இந்த திருமணம் செல்லாது என்ற போதிலும், பெண் மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் ஆட்கொணர்வு மனுவையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications