தமிழக மக்களே, இலவசங்களால் உங்களது பிரச்சினைகள் தீராது.. மாயாவதி அறிவுரை
சென்னை: இலவசப் பொருட்களால் தமிழக மக்களின் எந்தப் பிரச்சினையும் தீராது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று உ.பி. முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி கூறியுள்ளார்.
இதுபோன்ற இலவசங்கள் என்ற மாய வலையில் தமிழக மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் மாயாவதி கூறியுள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று பிரச்சாரம் செய்து பேசினார் மாயாவதி.

அக்கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது:
பிராந்தியக் கட்சிகள் இலவச செல்போன்கள் உள்ளிட்ட பல இலவசங்களை அறிவித்துள்ளன. ஆனால் இவற்றால் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது. உங்களது பிரச்சினைகளை இந்தக் கட்சிகள் தீர்க்காது, தீர்க்கவும் முயலாது.
மக்களுக்குத் தேவை கல்வி, வேலைவாய்ப்புதான், வறுமை ஒழிய வேண்டும். இதற்கு இந்த இலவசப் பொருட்கள் உதவாது. இது மக்களை ஏமாற்றும் தந்திரம். இந்த மாய வலையில் மக்கள் சிக்கி விடக் கூடாது.
இலவசம் தருகிறோம் என்று சொல்லும் கட்சிகளுக்கு ஓட்டுப் போடாதீர்கள். சரியான கட்சிக்கே நீ்ங்கள் வாக்களிக்க வேண்டும். உங்களுக்கு வேலை தருவோருக்கும், உங்களது வறுமையைப் போக்குவோருக்குமே நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட சரியான கட்சி பகுஜன் சமாஜ் கட்சி. உத்தரப் பிரதேசத்தில் நான்கு முறை நான் முதல்வராக இருந்தபோது மக்களுக்காக பல திட்டங்களைக் கொண்டு நிறைவேற்றியுள்ளேன். இது தமிழக மக்கள் உணர வேண்டும்.
நாங்கள் எதையுமே சொல்ல மாட்டோம். செய்வதில் மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற கட்சிகள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றவே செய்கிறார்கள் என்றார் அவர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications