For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முனிசிபாலிட்டி சேர்மன், 3 முறை முதல்வர், இன்று துணை முதல்வர்... ஓ.பி.எஸ்ஸின் தொடரும் பயணம்!

அதிமுகவின் நகர்மன்றத் தலைவராக தனது பயணத்தைத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் 3 முறை முதல்வராகி இன்று தர்மயுத்தத்தின் மூலம் துணை முதல்வராகியிருக்கிறார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் இடையில் 3 முறை ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டு, அவரது மரணத்திற்குப் பிறகு தர்மயுத்தம் தொடங்கி இன்று துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார்.

1996- 2001 தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக செயல்பட்டார்.

O.Paneerselvam Political journey from 3 times CM to Deputy CM

2001 : சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து போட்டியில் வெற்றி பெற்றார்.

மே 19, 2001 - செப்டம்பர் 1, 2001: வருவாய்த்துறை அமைச்சராக செயல்பட்டார்.

செப்டம்பர் 21, 2001 - மார்ச் 1, 2002: முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார். (டான்சி வழக்கில் ஜெயலலிதா முதல்வராக தொடரை
முடியாததால் ஓ.பிஎஸ்க்கு வாய்ப்பு)

மார்ச் 2, 2002 - டிசம்பர் 2006: பொதுப்பணித்துறை அமைச்சர்

2006: சட்டசபைத் தேர்தலில் மீண்டும் பெரியகுளம் தொகுதியில் வெற்றி

2006 - 2010: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக செயல்பட்டார்

2011: போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி

மே 16, 2011: நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவராக செயல்பட்டார்

செப்டம்பர் 27, 2014: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக செயல்பட்டார்.

மே 22, 2012: ஜெயலலிதா விடுதலையானதால் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

2016: போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு நான்காவது முறையாக வெற்றி

மே 16, 2016: நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவராக செயல்பட்டார்

டிசம்பர் 5,2016: ஜெயலலிதா உயிரிழந்ததால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நள்ளிரவில் பதவியேற்பு

பிப்ரவரி 5, 2017: சசிகலா குடும்பத்தினரின் வற்புறுத்தலால் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்

ஆகஸ்ட் 21, 2017: துணை முதல்வராக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசில் பதவியேற்பு

English summary
O. Paneerselvam Political journey from local body to three times CM and now after Jayalalitha death announced as deputy Cm in
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X