மாற்று அணிக்கு முயற்சித்து வருகிறோம்... டாக்டர் ராமதாஸ்
கிருஷ்ணகிரி: 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மாற்று அணியை அமைத்து மக்களை சந்திக்க பாமக முயற்சித்து வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரிக்கு வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. தலைமையில் 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அரசியல் மாற்றத்திற்கான அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மது, ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை முன் நிறுத்தி பிரசாரம் செய்வோம்.

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு சமுதாயத்தையும் பொருளாதாரத்தில் முன்னேற்ற முடியும். பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டாம் என எங்கும் கூறவில்லை. பெண்களுக்கு திருமண வயது 21 என நிர்ணயம் செய்ய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பிற்கு பின் பெற்றோர் சம்மதத்துடன் பெண்கள் தங்களது வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் காந்தலூர் பட்டுசேரி பகுதியில் பாம்பாற்றின் குறுக்கே 3 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க புதிய தடுப்பணை கட்ட மத்திய புவியியல்துறை அனுமதி அளித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதிய தடுப்பணை கட்ட அனுமதிக்கக் கூடாது.
கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்து விளம்பரம் செய்வது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கும், சில தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் நிதி சீர்கேடு நடந்துள்ளது. இது போக்குவரத்து கழக பொருளாதாரத்தில் அமிலத்தை ஊற்றி அழிக்கும் செயலாகும். உச்சநீதிமன்றம் வெளிப்படையான நடைமுறை இல்லை என கூறி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இது அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதற்கு ஒரு உதாரணமாகும்.
மத்திய அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்கக்கூடாது. தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து, வறுமை குறைந்துள்ளது. இத்திட்டத்தை வேளாண், விவசாய பணிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.
தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என்று பா.ம.க. கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அந்த வீடு இடிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றார் ராமதாஸ்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications