சட்டசபை தேர்தல்: ஜன. 15-க்குள் வேட்பாளர் பட்டியல்; திமுக சதியால் அன்புமணிக்கு எதிராக சகாயம்- ராமதாஸ்
கன்னியாகுமரி: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஜனவரி 15-க்குள் வெளியிடுவோம் என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை அன்புமணி ராமதாஸுக்கு போட்டியாக களமிறக்க தி.மு.க.தான் சதி செய்வதாகவும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட பா.ம.க. பொதுக் குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,
சட்டசபை தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் பொங்கல் பண்டிகைக்குள் வெளியிடப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
பா.ம.க .முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சகாயம் ஐ.ஏ.எஸ்-முதல் வேட்பாளராக வரவேண்டும் என சொல்கிறார்கள். அன்புமணியின் வளர்ச்சியை பிடிக்காத திமுகவினர்தான் இதன் பின்னணியில் உள்ளனர்.
சகாயம் கிரானைட் ஊழல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டவர். அவர் தனது அறிக்கையை தற்போதுதான் தாக்கல் செய்துள்ளார். அவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் சகாயத்தால் எப்படி ஒரு கட்சியை இப்போது தொடங்கி மக்களை சந்திக்க முடியும்? எனக்கு தெரிந்தவரை சகாயத்திற்கு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை.
அவர் குடிமைப்பணியில் தொடரவே விரும்புகிறார். ஆனால் சிலர் வேண்டுமென்றே விஷமனத்தனமான பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications