மக்கள் தூங்கும் போது எக்கேடாவது கெட்டு போங்கன்னு ஏரியை திறந்துவிடுவதா?: சீமான் கடும் கண்டனம்
சென்னை: மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது எக்கேடாவது கெட்டு போங்கன்னு செம்பரம்பாக்கம் ஏரியை எப்படி திறந்துவிடலாம்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை சீமான் வழங்கி வருகிறார். அண்ணா நகர், மதுரவாயல், பீர்க்கன்கரணை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று நேரில் சென்று சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார் சீமான்.
அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
ஏரிக்கரை மற்றும் ஆறுகளின் ஓரங்களில் உள்ள வீடுகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆறுகள் அளவு சுருங்கியதுதான். இதையெல்லாம் தாண்டி அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டதுதான் இவ்வளவு பேரிழப்பு.

எக்கேடோ கெட்டுப்போன்னு..
மக்களுக்கு முன்கூட்டியே நீரை திறந்து விடுவது பற்றிய முன்னறிவிப்பைச் செய்திருந்தால் மக்கள் தங்களுக்கான அத்தியாவசிய பொருளான குடும்ப அட்டை, சான்றிதழ் போன்றவற்றைப் பாதுகாத்து இருப்பார்கள். ஒரு ஏரி இருக்கிறது என்றால் அந்த ஏரிக்கு என்று ஒரு கண்காணிப்பு அதிகாரி இருக்கிறாரா இல்லையா? ஏரி இவ்வளவு நேரத்தில் நிரம்பும் என்ற கணக்கு இருக்கணுமா இல்லையா? அந்த அளவை பார்த்து முன்னறிவிப்புச் செய்து எந்த இடத்தில் நீர் வருமோ அங்குத் தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை அனுப்பி மக்களைப் பாதுகாத்துவிட்டு பிறகு நீரை திறந்துவிட்டு இருக்கணும். அதை விட்டு விட்டு நள்ளிரவு மக்கள் உறக்கத்தில் இருக்கும்போது எக்கேடாவதுகெட்டு போங்க எனத் திறந்து விட்டால் அது எவ்வளவு கவனக்குறைவான வேலை.

சேறு, சகதி...
நான் பார்த்த வரை வீடுகளில் முழங்கால் வரை சேறும் சகதியுமாக இருக்கிறது. இதை மக்களே எப்படிச் சுத்தப்படுத்த முடியும். இதுவரை நான் பார்த்த மக்கள் அனைவருமே எதிர்பார்ப்பது மாற்று உடை, தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளப் பாத்திரம், விரித்துப் படுக்கப் பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களைதான்.... எங்களால் முடிந்த அளவுக்கு எங்கள் மக்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டு வருகிறோம்.

வாக்கு கேட்டவங்க எல்லாம் எங்கே?
மக்கள் வருத்தபடுவதெல்லாம் தங்களைப் பார்க்க யாருமே வரவில்லையே என்றுதான். யாருமே என்றால் அதிகாரத்தில் இருக்கும் பெரிய தலைவர்கள், மாமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் இவர்கள்தான். இவர்கள் அனைவரும் வாக்கு கேட்டு வந்தார்கள் ஆனால் நாம் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும்போது ஒருவருமே வரவில்லையே என மக்கள் மிகுந்த மனவேதனை அடைகிறார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள்...
பிழைக்க வந்த மக்கள் தங்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறார்கள். இப்போது மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மக்கள் கேட்பது இந்தச் சகதியை அள்ளி சுத்தம் செய்துகொடுத்தால் போதும் நாங்கள் எப்பாடுபட்டாவது வேலை செய்து பிழைத்துகொள்கிறோம். இதைமட்டும் நிறைவேற்றிக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

இழிவான அரசியல் வேண்டாம்
இந்த அரசாங்கம் நிவாரணத் தொகையாக வெறும் 1000 கோடியைதான் ஒதுக்கி உள்ளார்கள். இதைவைத்து என்ன செய்யமுடியும். இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யவேண்டும் என்றால் குறைந்தது இலட்சம் கோடியாவது தேவை. எனவே மத்திய, மாநில அரசுகள் இவருக்குப் பேர் போய்விடுமோ, அவருக்குப் பேர் போய்விடுமோ என்று ஒதுங்கி இருந்து இழிவான அரசியலை செய்யாமல் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications