ரஜினிக்கு வரவேற்பு.. கமலுக்கு கடும் எதிர்ப்பு! - சீமான்
சென்னை: நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்ற மாற்ற வேண்டும் என்ற ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்பதாகவும், கமலின் கருத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் 'நாம் தமிழர் கட்சி' ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
'நாம் தமிழர் கட்சி' ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ரஜினிகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம்எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் எனவும்கூறியுள்ளனரே? எனக் கேட்டதற்கு,

"பலகோடி தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஐயா திரு.ரஜினிகாந்த் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்தை நான்வரவேற்கிறேன். அவரது மதிப்பார்ந்த கருத்துக்கு நன்றி.
கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் எனச் சொல்லியிருக்கும் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால், அதற்கு முன்பு கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா மாநிலங்களிலும் இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றிவிட்டு இந்த நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமென்றோ அல்லது அகில உலக நடிகர் சங்கம் என்றோகூட மாற்றிக் கொள்ளட்டும்.
அதே இந்தியப் பற்றோடு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீரை தமிழகத்திற்கு பெற்றுக் கொடுத்துவிட்டால் ரொம்ப மகிழ்ச்சியடைவோம். கேரளாவில், கேரள நடிகர் சங்கம் என்று தனியாக வைத்து கேரள நடிகர்கள் மலையாளிகளாகவே இருப்பர், ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து தெலுங்கராகவே இருப்பர். கர்நாடகத்தில், கன்னட நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து கன்னடராகவே இருப்பர். நாங்கமட்டும் தென்னிந்தியான்னு வைக்க வேண்டுமா? வேணாம். தமிழ் நடிகர்கள் சங்கமாக மாத்துங்க என்று சொன்னால்இந்தியான்னு வைக்கணும்?
இதையும் கேட்டுக்கிட்டு மானங்கெட்ட தமிழனா வாழ்ந்துக்கிட்டிருக்கோம், என்ன பண்றது?," என்று வேதனையோடு தெரிவித்தார்.
-
ஈரானும் ஊரானும் வாழட்டும்! நீங்க எந்த கட்சி அமெரிக்காவா? ஈரானா? தனது ஸ்டைலில் கமல் சொன்ன வார்த்தை! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications