For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மழை வெள்ளத்தால் மூழ்கிப் போன சென்னை பெருநகரத்தின் துயரத்தை மட்டுமல்ல.. இதற்கான காரணத்தையும் விளக்கும் ஒரு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

சிவாஜிகணேசன் நடித்த கர்ணன் படத்தில் இடம்பெற்ற "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது....." என்ற பாடலை வைத்து "வெள்ளத்தில் சென்னை வெள்ளம் வடியாதென்பது" என தற்போதைய நிலைமைக்கேற்ப இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது.

இதை ஒரு பெண்மணி அவ்வளவு அழகாக "கர்ணன்" பட பாடலைப் போன்றே ஏற்ற இறக்கத்துடன் உருக்கத்துடன் பாடும் வீடியோ இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் நாம் பார்த்த லிங்கில் மட்டும் 30 ஆயிரம் பேர் இதை ஷேர் செய்துள்ளனர் எனில் பார்த்துக் கொள்ளுங்களேன்...

உங்களுக்காக அந்த பாடல் வரிகள்:

"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்..
வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா...
எம்மிடம் அருள் செய்யடா...

குடியேற இடம்தேடி....
கூடாத செயல் செய்து
குடியேற இடம்தேடி........
கூடாத செயல் செய்து.....

ஏரிகள் தூர்த்தோமடா.... வருணா
இயற்கையிடம் தோற்றோமடா.....வருணா.....
இயற்கையிடம் தோற்றோமடா............

கால்வாய்க்கு வழியில்லை..................
நீர்போக பாதையில்லை..............
வீடுகள் மிதக்குதடா..... நீயும்

தண்டித்தல் அறமல்லடா... நீயும்
தண்டித்தல் அறமல்லடா.....

மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடா.....வருணா....

ரேஷனில் மழைபெய்யடா...........வருணா.....
ரேஷனில் மழைபெய்யடா............

"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்..
வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா...
எம்மிடம் அருள் செய்யடா...

வீடியோ இணைப்பு:

யார் என்று தெரியவில்லை. வாட்ஸ் ஆப்பில் வந்தது. சூப்பரோ சூப்பர்.

Posted by Venkatasubramanian Narayanan on Monday, November 23, 2015

English summary
One Video Song on Chennai's terrible flood now going viral in Social Medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X