இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் 2 மீனவர் படுகாயம்.. திருநாவுக்கரசர் கண்டனம்
இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் 2 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதற்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இலங்கை கடற்படை நடத்தி துப்பாக்கி சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவருக்கு விசைப்படகு ஒன்று சொந்தமாக உள்ளது. இந்த விசைப்படகை எடுத்துக் கொண்டு 8 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 8 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பக்கமாக இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்காக வந்தனர். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை பார்த்த இலங்கை கடற்படையினர் விசைப்படசை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனால் விசைப்படகில் இருந்த கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த அரவிந்த் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், அங்கிருந்து தப்பி கரைக்கு திரும்பினர். காயம் அடைந்த தினேஷ் மற்றும் நம்பியார் ஆகிய இரண்டு பேரும் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் தொடர்பாக கடந்த 5ம் தேதிதான் இலங்கை மற்றும் இந்திய அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. அப்போது, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தேர்வு எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருப்பது மீனவ மக்களிடையே கலக்கதை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், மீனவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது நாடகம் என்பதை துப்பாக்கிச் சூடு சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துள்ளதை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் இளங்கோ கூறியுள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications