Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் திருப்பம்.. ராம்குமார் முன்னிலையில் சுவாதி நண்பர் முகமது பிலாலிடம் போலீஸ் திடீர் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரின் நீண்ட கால நண்பரான முகமது பிலால் சித்திக்கிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.

கடந்த மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வாலிபர் ஒருவரால் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

போலீஸ் காவலில் ராம்குமார்

போலீஸ் காவலில் ராம்குமார்

நெல்லையில் சிகிச்சை பெற்ற பிறகு சென்னை அழைத்து செல்லப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்திருந்தது.

கல்லூரி கால நண்பர்

கல்லூரி கால நண்பர்

இந்நிலையில், சுவாதியுடன் கல்லூரியில் சேர்ந்து படித்து, கடைசிவரை நண்பராக இருந்த முகமது பிலால் சித்திக் என்ற நபரிடம் போலீசார் இன்று திடீரென விசாரணை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் வதந்தி

வாட்ஸ்அப் வதந்தி

சுவாதி கொலை நடந்த சில தினங்களிலேயே, இந்த வழக்கில் பிலால் மாலிக் என்பவருக்கு தொடர்புள்ளதாக வாட்ஸ்அப்பில் ஒரு வதந்தி பரவியது. இதை பேஸ்புக்கில் ஒய்.ஜி.மகேந்திரன் ஷேர் செய்திருந்தார். எதிர்ப்பு காரணமாக பிறகு மன்னிப்பு கேட்டார்.

மர்மம் நீடிப்பு

மர்மம் நீடிப்பு

சுவாதிக்கு முகமது பிலால் சித்திக் என்ற நண்பர் இருப்பது பிறகுதான் போலீசார் மூலம் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. ஆனால் அவரது பெயரையொட்டி ஒரு புரளி முன்கூட்டியே பரவியது எப்படி என்பது மர்மமாகவே உள்ளது.

திடீர் விசாரணை

திடீர் விசாரணை

இந்நிலையில்தான், பிலால் சித்திக்கிடம் இன்று நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்ததை தொடர்ந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு பிலால் சித்திக் சென்றார்.

ஹெல்மெட் அணிந்தபடி

ஹெல்மெட் அணிந்தபடி

பிலால் ஏற்கனவே மீடியாக்களிடம் பேட்டியளித்து பிரபலமாகியுள்ளார். எனவே தனது முகத்தை வெளிக்காட்டாமல் ஹெல்மெட் அணிந்தபடியே காவல் நிலையத்திற்குள் அவர் சென்றதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பு

பரபரப்பு

ராம்குமார் மட்டுமே இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர் இல்லை என்று அவரது வக்கீல் ராமராஜ் கூறிவருகிறார். இந்நிலையில் சுவாதி நண்பர் பிலால் சித்திக்கிடம் விசாரணை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம்குமார் கொடுத்த தகவல்

ராம்குமார் கொடுத்த தகவல்

தற்போது ராம்குமாரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகிறது. அவர் கொடுத்த ஏதோ ஒரு முக்கிய, தகவலின்பேரில்தான், பிலால் சித்திக்கிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

ராம்குமார் முன்னிலையில்

ராம்குமார் முன்னிலையில்

இந்த விசாரணை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தி்ல நடந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்குமாரையும், பிலால் சித்திக்கையும் உட்கார வைத்து நேருக்கு நேர் விசாரணை நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ராம்குமார் கூறிய தகவல்களின் அடிப்படையில் பிலாலிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெறப்பட்டதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம்குமார் மட்டுமே என்றார்களே..

ராம்குமார் மட்டுமே என்றார்களே..

சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி, அவருக்கு உடந்தை யாரும் இல்லை என்று, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், தடாலடியாக தெரிவித்தார். விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருந்தபோதே கமிஷனர் இவ்வாறு கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில் சுவாதி கொலை வழக்கில் மீண்டும் தூசு தட்ட ஆரம்பித்துள்ளது காவல்துறை. இதனிடையே, இது வழக்கமான விசாரணைதான், அவ்வப்போது போலீசார் கூப்பிட்டு விளக்கம் கேட்டு வருகிறார்கள் என பிலால் உறவினர் ஒருவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+