தெரியாமல் கொலை செஞ்சுட்டேன்.. கண்ணீர் விட்டு கதறும் ராம்குமார்
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்கொலைக்கு முயன்றதால், கழுத்தில் அவருக்கு தையல் போடப்பட்டுள்ளது. நேற்று முதல் அவர் திட உணவுகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்.
காலையில் இட்லி சாப்பிட்ட அவர், மாலையில், கிச்சடியும், பாலும் உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதை சிரமமின்றி அவர் சாப்பிட்டார். எனவே காயம் வேகமாக குணமடைந்து வருவதாக டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சிகிச்சை
இரண்டு மருத்துவர்கள், ஒரு நர்ஸ் ஆகியோர் ராம்குமாருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. இன்று அனேகமாக அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

நீதிபதி விசாரணை
நேற்று எழும்பூர் நீதிபதி கோபிநாத் ராம்குமாரிடம் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கினார். ராம்குமாருக்கு 18ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்தார் நீதிபதி.

வாயை வெட்ட போனாராம்
என்னை தேவாங்கு போல இருப்பதாக சுவாதி கேலி செய்து இழிவுபடுத்தியதால், அப்படி பேசிய வாயை வெட்ட வேண்டும் என்றுதான் அரிவாளோடு சென்றேன். கொலை செய்யும் நோக்கத்தோடு வெட்டவில்லை. ஒரு முறைதான் வாயில் வெட்டினேன். வெட்டியபோது அரிவாளை சதைக்குள் இறங்கி மாட்டிக்கொண்டது. எனவே என்னால் அதை வெளியே இழுக்க முடியவில்லை.

தெரிந்து கொல்லவில்லை
பொதுமக்கள் அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்ற பயத்தில், வேகவேகமாக அரிவாளை உருவ முற்பட்டேன். அதில்தான் கூடுதலாக வெட்டுபட்டு சுவாதியின் உயிர் போயிருக்கிறது என்று நினைக்கிறேன்.

கண்ணீர்
இது தெரியாமல் செய்த தவறு. என்னை மன்னித்து விட்டுவிடுங்கள். இவ்வாறு மருத்துவமனை ஊழியர்களிடமும், போலீசாரிடமும், கண்ணீருடன் கதறியுள்ளார் ராம்குமார். இவ்வாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications