Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக விவசாயிகள் போராட்டம்: சரக்கு லாரி, பேருந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் 200 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு கருதி கர்நாடகத்தில் இருந்து தமிழத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு 6 மணிக்கு மேல் இயக்கப்பட்டன.

தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விவசாயிகள் சாலையில் மரங்களை வெட்டிபோட்டு மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் திருத்துறைப்பூண்டியில் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tamil Nadu farmers bandh hits transport services

தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் 200 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு கருதி கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து தமிழத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. ஆறுமணிக்கு மேல் பேருந்துகள், லாரிகள் இயக்கப்பட்டன.

தமிழக எல்லையில் கர்நாடக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பேருந்து நிலையங்களில் காத்திருந்தனர். 6 மணிக்கு மேல் பேருந்து புறப்பட்ட உடன் சென்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. தமிழக எல்லையில் கர்நாடக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பேருந்து நிலையங்களில் காத்திருந்தனர்.

ஓசூர் வழியாக இயக்கப்படும் கர்நாடக மாநில பேருந்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. மிகக்குறைந்த எண்ணிக்கையில் கர்நாடக மாநில பேருந்துகள் இயக்கப்படுவதால் ஓசூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. பெங்களூருவுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக உதகமண்டலத்துக்கு வந்த கர்நாடக மாநில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கக்கநல்லா வரை மட்டுமே இயக்கப்பட்டன. 6 மணிக்கு மேல் உதகமண்டலம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதிகாலையில் வந்த பேருந்துகள் கூடலூரில் நிறுத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. கக்கநல்லா மற்றும் கூடலூரில் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடலூரில் வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+