For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன தீபா... பேட்டியை ஒளிபரப்பாமல் நிறுத்திய தந்தி டிவி

தந்தி டிவியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டி ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது அந்த பேட்டியை ஒளிபரப்பாமல் நிறுத்தியது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை:தந்தி டிவியில் வாரந்தோறும் சனி,ஞாயிறு கிழமைகளில் கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.ரங்கராஜன் பாண்டே இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் சனி,ஞாயிறு தினங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டி ஒளிபரப்பாகும் என்று முன்னோட்டம் ஒளிபரப்பானது.

Thanthi TV canceled Jayalalithaa's nice Deepa interview

அரசியலுக்கு வருவேன் தீபாவின் பேட்டி:

இந்த பேட்டியில் பரபரப்பான பல கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார் தீபா. அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார்.டிசம்பர் 15 ரங்கராஜன் பாண்டே தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் எதிர்பார்த்தது போல இந்த பேட்டியை தந்தி டிவி ஒளிபரப்பவில்லை. அதற்கு பதிலாக தமிழக அமைச்சர் தங்கமணியின் பேட்டியை ஒளிபரப்புகின்றனர்.

ரங்கராஜன் பாண்டேவின் இன்றைய பதிவில் அமைச்சரின் பேட்டியை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளனர்.

Thanthi TV canceled Jayalalithaa's nice Deepa interview

அமைச்சர் தங்கமணி அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் என்று போஸ்ட் போட்டு சிரிக்கிறார் ரங்கராஜன் பாண்டே.இதற்கு சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தீபாவின் பேட்டியை ஒளிபரப்ப முடியாமல் போனதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Thanthi TV canceled Jayalalithaa's nice Deepa interview in Kelvikenna pathil Program. Social media persons quesions program co ordinator Rangarajan Pande.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X