மதுக்கடைகளை மூடுங்கள்... முழக்கமிட்ட திருமா, ஜவாஹிருல்லா, முத்தரசன், ஜி.ரா., கைது
சென்னை: ஏழை, எளிய மக்களின் உயிரைக்குடிக்கும் மதுக்கடைகளை மூடுங்கள் என்று மயிலாப்பூரில் பேரணியாக சென்று மக்கள் முன்பு பேசிய திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி இன்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, புதிய தமிழகம் உள்பட் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மயிலாப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா ஆகியோர் பேரணியாக சென்றனர்.
மக்களிடம் மதுவின் தீமைகளைப் பற்றி எடுத்துக்கூறியதோடு, திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு வலியுறுத்தனர். மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வரும் 10ம் தேதி திமுகவினர் மதுவிற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இன்றைய போராட்டத்திற்கு திமுகவினர் ஆதரவு தரவில்லை. எனவே மதுவிலக்கு தொடர்பான திமுகவின் நிலைப்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக விமர்சித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications